சவுதியில் ஆயில் நிறுவனத்திற்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து: 11 பேர் பலி.55e2c67232410.imageசவுதியின்  கிழக்கு  நகரான கோபாரில் உலகிலேயே மிகவும் பெரிய ஆயில் நிறுவனமான சவுதி அராம்கோ  செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது.


இதில் 77 நாடுகளைச் சேர்ந்த சுமார் 61 ஆயிரம் ஊழியர்கள் வேலைப்பார்த்து  வருகின்றனர்.


இவர்களுக்கென  தனியாக  தங்கும் அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டுள்ளது.  இந்த  அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தின் கீழ் தளத்தில்  திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ மளமளவென மேல்மாடிக்கும் பரவியது.


தீ விபத்து ஏற்பட்டதும் அங்கு தங்கியிருந்தவர்கள் உயிரை கையில் பிடித்தவாறு  வெளியில் ஓடினார்.  ஆனாலும்,  தீயில் கருதி 11 பேர் பரிதாபமாக  உயிரிழந்ததாக  கூறப்படுகிறது.


மேலும், இந்த விபத்து 219 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த தகவலை அந்த நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த தீ விபத்து படத்தை சவுதி உள்துறை  அமைச்சர்  வெளியிட்டுள்ளது.


அடுக்குமாடி குடியிருப்பு அருகில் உள்ளவர்கள், தீ விபத்து ஏற்பட்டதும் ஹெலிகாப்டர்  மூலம்  மீட்பு  பணி  நடைபெற்றது  என்று தெரிவித்தனர்.


55e2f0981eda1.image55e2c67232410.image

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.