நுங்கம்பாக்கத்தில் ரூ.12 லட்சம் நகை–பணத்துடன் தலைமறைவான வேலைக்கார பெண்.fbff6d67-ab61-430c-bf42-6a778ca910c9_S_secvpf.gifசென்னை  நுங்கம்பாக்கம் ஷெனாய் தெருவில் வசித்து வருபவர் வர்க்கியா (45). இவரது கணவர் ஜமால் துபாயில் வேலை செய்து வருகிறார்.


வீட்டு வேலைக்கு உதவி செய்ய ஆள் வேண்டும் என்று சமீபத்தில் இணைய தளம்  வழியாக  விளம்பரம்  கொடுத்து  இருந்தார்.


இதையடுத்து ராயபுரத்தில் உள்ள ஆதரவற்றோர் இல்லம் மூலமாக தேவி என்ற பெண்ணை வீட்டு வேலைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். சுமார் 35 வயதான  தேவியை  சாந்தி என்றும் அழைப்பார்களாம்.


வேலைக்கு சேர்ந்தவுடன் தேவி மிகவும் பொறுப்புடனும் நம்பிக்கைக்கு பாத்திரமாகவும் நடந்து கொண்டார். அவரது நடவடிக்கையில் அசந்து போன வர்க்கியா முழுமையாக நம்பினார்.


இந்த நிலையில் தேவி கடந்த 9–ந்தேதி முதல் வேலைக்கு வரவில்லை. திடீரென நின்று விட்டார்.


இதற்கிடையில் பீரோவில் வைத்திருந்த 44 பவுன் நகை மற்றும் ரூ.3 லட்சத்து 60 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை காணவில்லை. வீட்டிற்கு வேறு யாரும் வரவில்லை.  வேலைக்கார  பெண்  மட்டும் தான்  இருந்துள்ளார்.


வீட்டில் பல இடங்களில் தேடியும் நகை–பணம் கிடைக்கவில்லை. இதனைத் தொடர்ந்து தேவியின் மீது வர்க்கியாவிற்கு சந்தேகம் வந்தது. அவர் திடீரென எவ்வித தகவலும் சொல்லாமல் வேலைக்கு வராததால் அவள்தான் கைவரிசை காட்டி இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் நுங்கம்பாக்கம் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.


போலீசார்  வழக்குப்பதிவு  செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுநாள் வரையில் வங்கி லாக்கரில் இருந்த நகையை ஒரு நிகழ்ச்சிக்காக வர்க்கியா எடுத்து வந்தார்.  பின்னர்  மீண்டும் லாக்கரில் வைப்பதற்காக நகையை எடுக்க செல்லும்  போதுதான்  வீட்டில்  நடந்த கொள்ளை அவருக்கு தெரிந்துள்ளது.


இதே போல வேப்பேரி போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட திடீர் நகர் பகுதியில் உள்ள வீட்டு வசதி குடியிருப்பில் வசித்து வரும் லட்சுமி என்பவர் வீட்டில் 15 பவுன் நகை கொள்ளை போனதாக புகார் கொடுத்துள்ளார். இது குறித்து விசாரணை நடக்கிறது.

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.