இஸ்லாமிய இளைஞரை ஈவிரக்கமின்றி தாக்கிய கலாச்சாரக் காவலர்கள்: 13 பேர் கைது.sahil copyகர்நாடக மாநிலம் மங்களூருவில் ஒரு இஸ்லாமிய இளைஞர் தன்னுடன் பணிபுரியும் சக இந்து பெண் ஊழியரிடம் பேசியதைப் பார்த்த கலாச்சாரக் காவலர்கள் மக்கள் கூட்டம் மிகுந்த பகுதியில் மின் கம்பத்தில் கட்டி வைத்து அவரை  ஈவிரக்கமின்றி  தாக்கியுள்ளனர்.


விசாரணையில்  தாக்குதலுக்குள்ளான நபரது பெயர் ஷகீர் (28) என்று தெரியவந்துள்ளது. ஷகீரும் அந்த பெண்ணும் சூப்பர் மார்க்கெட்டில் ஒன்றாக பணிபுரிந்தவர்கள்.


இருவரும்  பேசிக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த இந்து அமைப்பினர் பின்னர், அந்த நபரை தரதரவென இழுத்துச் சென்ற கும்பல், அவரது ஆடைகளை களைந்து சாலையோரத்தில் இருந்த கம்பத்தில்    கட்டி வைத்து சுமார் ஒரு மணி நேரம் கொடூரமாகத் தாக்கியதோடு மட்டுமின்றி, அந்தக் கொடூரக் காட்சியை புகைப்படம் எடுத்து அதை வாட்ஸ்  அப் மூலமாக  பரவவிட்டுள்ளனர்.


இந்த தாக்குதல் காட்சிகள் உள்ளூர் கேபிள் சேனல்களில் ஒளிபரப்பானதைப் பார்த்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் இந்த தாக்குதலில் தொடர்புடைய  13  நபர்களை  கைது செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர். கைது செய்யப்பட்டுள்ளர்களில் சிலர், பஜ்ரங் தளம் என்ற இந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள்  என்றும்  அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.


இது குறித்து காவல் துறையினரிடம் புகார் தெரிவித்துள்ள அந்த பெண், அந்த இளைஞர்  தன்னுடன்  ஒரு  ஷாப்பிங் மாலில் வேலை செய்பவரென்றும் அவர் தன்னிடம் 2000 ரூபாய் கடன் கேட்டதாகவும் அதற்காக ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுக்க சென்றபோது மர்மநபர்கள் கத்தி, தடியுடன் வந்த அந்த நபர்கள் அவரை தாக்கியதாகவும், அவரை பாதுகாக்க அவர் முயன்றபொழுது அந்த மர்ம நபர்கள் தன் கன்னத்தில் அறைந்ததாகவும் கூறியுள்ளார்.

பாதிக்கப்பட்ட நபர் மங்களூரு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். அளித்த பேட்டியில், "சம்பவம் குறித்து தெரிந்ததும் போலீஸார் உடனடியாக  நடவடிக்கை எடுத்தனர்.


ஆனால் அங்கிருந்த பொதுமக்கள் யாரும் சம்பவத்தை தடுக்கவில்லை. என்னை அவர்கள் அடித்து துன்புறுத்தியதை நூற்றுக்கணக்கானோர் நின்று வேடிக்கை பார்த்தனர்.  ஒருவரும்  உதவிட  முன்வரவில்லை" என்றார்.


மங்களூருவில்  இது  போன்ற  மத வெறித்  தாக்குதல் நடைபெறுவது இது முதல் முறையல்ல.  கடந்த 2009 ஆம் ஆண்டு பப்பில் இருந்த பெண் ஒருவர் ஸ்ரீ ராம சேனா என்ற இந்து அமைப்பால் கொடூரமாக தாக்கப்பட்டார். இந்திய மரபுகளையும் கலாச்சார மதிப்பீடுகளையும் அவர் மீறினார் என்று அந்த தாக்குதலுக்கு அவர்கள் காரணம் கற்பித்தனர்.

இஸ்லாமிய இளைஞர் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு இஸ்லாமிய அமைப்பினரும்,  சமூக  ஆர்வலர்களும்  கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.


மேலும், தலைமறைவான 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து மங்களூரு போலீஸார் தேடி வருகின்றனர்.


11892163_1066565413362136_6213086503584262363_n copy


.

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.