கூகுளைவிட துல்லியமான தகவல்களைத் தரும் தேடுபொறியை உருவாக்கி 16 வயது இந்திய வம்சாவளி மாணவன் சாதனை.33b31aee-fcac-41d6-bf9a-31e65eac8fd5_S_secvpfஇணையதள  தேடுபொறியின் ஜாம்பவானாக குறிப்பிடப்படும் கூகுளைவிட 47 சதவீதம் துல்லியமாக தகவல்களை பரிமாறும் புதிய தேடுபொறியை உருவாக்கி இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மாணவர் சாதனை படைத்துள்ளார்.


கனடா  நாட்டின் குடிமகனான, அன்மோல் துக்ரேல்(16) உருவாக்கியுள்ள இந்த தேடுபொறி, கூகுளைக் காட்டிலும் துல்லியமாக இருப்பதாக அமெரிக்காவின்  பிரபல  நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை புகழாரம் சூட்டியுள்ளது.


பத்தாம் வகுப்பு முடித்திருந்த நிலையில், கூகுள் இணையத்தில் நடத்தப்பட்ட உலகளாவிய  அறிவியல் கண்காட்சிக்காக அன்மோல் தான் உருவாக்கிய புதிய தேடுபொறியை சமர்ப்பித்திருந்தான். உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும்  13 முதல் 18  வயதுடைய  மாணவர்கள்  இந்தப் போட்டியில் பங்கேற்று  தங்களது  படைப்புகளை காட்சிப்படுத்தி இருந்தனர்.


சில  மாதங்களிலேயே  தனது  தேடுபொறியை  வடிவமைத்ததாகவும், வெறும் 60 மணி  நேரங்களில்  அதற்கான  ‘கோடிங்கை’ தயார் செய்ததாகவும் அன்மோல் தெரிவித்தார். பொதுவான தேடுபொறிகளைவிட 21 சதவிகிதம் துல்லியமாக இருக்கும் இவரது படைப்பு, கூகுளைக்காட்டிலும் 47 சதவிகிதம் துல்லியமானதாக உள்ளது.


கணினி கோடிங்கினை மூன்றாம் வகுப்பின்போதே பயின்ற அன்மோல், தற்போது ‘டேக்கோகேட்’ என்னும் மென்பொருள் நிறுவனத்தை நடத்திவருகிறார். ஸ்டேன்போர்ட் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் பயில முடிவு செய்துள்ளார்.


ஏனெனில், புதிதாக ஒரு விஷயத்தை செய்துவிட்டால், அதற்குமேல் கற்க ஏதுமில்லை என நாம் எண்ணிவிடக் கூடாது என்கிறார் அன்மோல். இவர் சமீபத்தில்,  இரு  வாரங்கள் பெங்களூரில் உள்ள ‘ஐஸ்கிரீம்லேப்’ மென்பொருள் நிறுவனத்தில் இண்டர்ன்ஷிப்புக்காக இந்தியா வந்திருந்தார் என்பது  குறிப்பிடத்தக்கது

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.