திருச்சி ரயிலில் தவறவிட்ட 18 பவுன், ரூ.20,000 மீட்பு.67_full copyதிருச்சி மணப்பாறையை சேர்ந்தவர் ராகவேந்திரன். இவர் பெங்களூர் குருவண்ட பள்ளியில் வசித்து வருகிறார். இவருக்கு 27ம் தேதி மணப்பாறையில்  திருமணம்  நடைபெற உள்ளது.


இந் நிலையில் ராகவேந்திரன் மற்றும் உறவினர்கள் ரூ.20,000, 18 பவுன் நகை ஆகியவற்றுடன்  மயிலாடுதுறை  செல்லும் மைசூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் முன் பதிவில்லா   பெட்டியில்  வந்தார்.


நேற்று அதிகாலை 4.30 மணியளவில் திருச்சிக்கு வந்த ரயிலிலிருந்து ராகவேந்திரன் உள்ளிட்டோர் இறங்கினர். திருச்சி மத்திய பேருந்து நிலையத்திற்கு  சென்ற போது நகை,  பணம்  இருந்த பையை ரயிலிலேயே தவறவிட்டது  தெரிய வந்தது.


இதனால் அதிர்ச்சியடைந்த  அவர்கள்  ரயில் நிலையத்திற்கு வந்த போது ரயில் புறப்பட்டு சென்று விட்டது.  இதையடுத்து  அவர்கள் ரயில்வே போலீசில்  புகார்  அளித்தனர்.


இது குறித்த தகவலை ரயிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மயிலாடுதுறை ரயில்வே போலீசார் அருள் மற்றும் ஜீவா ஆகியோருக்கு தெரிவிக்கப் பட்டது.


அவர்கள்  குறிப்பிட்ட அந்த ரயில் பெட்டியை சோதனை செய்தனர். அப்போது ராகவேந்திரன் குடும்பத்தினர் அமர்ந்திருந்த இடத்திலேயே நகை பணம்  அடங்கிய  பை  இருந்தது.   இதையடுத்து  அதனை  போலீசார் மீட்டனர்.


இது குறித்து ரயில்வே இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி, ராகவேந்திரன் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து நேற்று மதியம் ராகவேந்தினர் குடும்பத்தினர் மயிலாடுதுறை ரயில்வே போலீஸ் ஸ்டேஷனுக்கு  வந்தனர்.  அவர்களிடம்  நகை,  பணம் ஒப்படைக்கப்பட்டது.


திருமணத்திற்காக  சேர்த்து வைத்திருந்த நகை, பணம் காணாமல் போய் மீட்கப்பட்டதால் ராவேந்திரன் குடும்பத்தினர் மிகவும் மகிழ்ச்சியடைந்து போலீசாருக்கு  நன்றி  தெரிவித்தனர்.

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.