20 வருடமாக மாற்றுதிறனாளி மகனுக்கு உதவித்தொகை கிடைக்காமல் பரிதவிக்கும் தாய்.mttமுத்துப் பேட்டை அருகே அரசின் உதவித் தொகை கிடைக்காமல் உயிருக்கு போராடும் மாற்றுத் திறனாளி மகனை பராமரிக்க முடியாமல் வயதான தாய் தவித்து வருகிறார்.


முத்துப் பேட்டை அருகே உள்ள மேலநம்மங்  குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர்கள் ரெத்தினம்- வடுவம்மாள் தம்பதி. இவர்களது மகன் பாலகிருஷ்ணன் (27). இவர் 4 வயதில் இளம் பிள்ளை வாத நோயால் பாதிக்கப்பட்டு கை, கால்கள் செயல் இழந்தார். அவரால் பேசவோ, எந்த வேலையும் செய்யவோ முடியாது.


இந் நிலையில் தந்தையை இழந்த அவரை தாய் வடுவம்மாள் பராமரித்து வருகிறார். பாலகிருஷ்ணனுக்கு அரசின் உதவித் தொகை வேண்டி வடுவம்மாள் 20 வருடங்களுக்கு மேலாக கலெக்டர், தாசில்தார் மற்றும் ஆர் டிஓ அலுவலகங்களுக்கு பாலகிருஷ்ணனனை தூக்கிக் கொண்டு சென்று மனு அளித்து போராடியும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.


இதனால்  பாலகிருஷ்ணனின்  பராமரிப்பு மற்றும் மருத்துவ செலவுக்கு பணம் இன்றி  வடுவம்மாள் தவித்து வருகிறார். தற்போது பாலகிருஷ்ணனுக்கு  உடல்  நிலை  மிகவும் மோசமடைந்துள்ளது. அதற்கு கூட மருத்துவ சிகிச்சை அளிக்க கூட முடியாத நிலை உள்ளது.


இது குறித்து வடுவம்மாள் கூறுகையில், அவன் பிறந்த நாளிலிருந்து நான் அவனை விட்டு பிரிந்ததே இல்லை. என் மகனுக்கு உதவித் தொகைக்காக நான் பார்க்காத அதிகாரிகளே இல்லை. எந்த அதிகாரியும் உதவி செய்ய முன் வரவில்லை. அலைந்து சோர்ந்து போய் விட்டேன் என்று கண் கலங்கினார்.


இது குறித்து விசி கட்சி நிர்வாகிகள் மீனாட்சி சுந்தரம், மகாலிங்கம் கூறுகையில், அரசு இந்த இளைஞருக்கு உதவி செய்யாதது வருத்தம் அளிக்கிறது. விரைவில் இந்த இளைஞருக்கு அரசின் உதவி வேண்டி போராட்டம் நடத்த இருக்கிறோம் என்றனர்.

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.