லண்டனில் வேலை வாங்கி தருவதாக ரூ.26 லட்சம் மோசடி.Evening-Tamil-News-Paper_96530878544லண்டனில்  வேலை  வாங்கி  தருவதாக  ரூ.26 லட்சம் மோசடி செய்து விட்டதாக பாதிக்கப் பட்ட பெண் குடும்ப நண்பர் மீது திருவாரூர் எஸ் பி யிடம் புகார் அளித்துள்ளார்.


திருவாரூர் மேம்பாலம் அருகே உள்ள குருதட்சிணா மூர்த்தி நகரில் வசித்து வருபவர்  கோவிந்தசாமி மனைவி கிரிஜா. இவர் நேற்று முன் தினம் திருவாரூர் எஸ்.பி ஜெயச்திரனிடம் புகார் மனு கொடுத்தார்.


அதில்,  எங்களது குடும்ப நண்பர் அண்ணம்தையல் என்பவர் லண்டனில் வசித்து வருகிறார். அவரிடம் எனது சகோதரர் மகனுக்கு லண்டனில் உள்ள ஆயில் கம்பெனி ஒன்றில் வேலை பெறுவதற்காக கடந்த சில மாதங்களுக்கு முன்பு  ரூ.26 லட்சம்  கொடுத்தேன்.


ஆனால்  தற்போது வரை அவர் வேலை வாங்கி கொடுக்க வில்லை. இது குறித்து  தொலை பேசியில்  தொடர்பு  கொண்டு  கேட்ட போது மேலும் ரூ.9 லட்சம் கொடுத்தால் தான் வேலை கிடைக்கும் என்று அண்ணம்தையல் கூறுகிறார்.


எனவே  இது  குறித்து உரிய நடவடிக்கை எடுத்து எனது பணம் ரூ.26 லட்சத்தை பெற்றுத் தரவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். இது குறித்து மாவட்ட  குற்றப் பிரிவு  போலீசார்  விசாரணை  நடத்தி  வருகின்றனர்.

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.