கும்பகோணத்தில் ஆற்றில் மூழ்கி 4 மாணவர்கள் பலி: உடல்கள் இன்று மீட்புadcf6dbf-f9a6-49e0-a6c1-861b6a8f2425_S_secvpf.gifகும்பகோணம் அருகே உள்ள கொரநாட்டு கருப்பூரை சேர்ந்தவர் சித்திக். நாகை மாவட்டத்தில் அரசு பள்ளி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.


இவரது மகன் சல்மான்கான் (15). கும்பகோணத்தில் உள்ள தனியார் பள்ளியில் 10–ம் வகுப்பு படித்து வந்தார். இவரது உறவினர்கள் யாசர் (14), ஹனிபா (14) ஆகியோர் 9–ம் வகுப்பு படித்து வந்தனர்.


நேற்று மாலை இவர்கள் 3 பேரும் கும்பகோணம் அருகே உள்ள மணஞ்சேரி பகுதியில் காவிரி ஆற்றில் குளிக்க சென்றனர். மேட்டூர் அணை திறக்கப்பட்டு தற்போது  காவிரி ஆற்றில் தண்ணீர் அதிகம் வருவதால் மாணவர்கள் 3 பேரும்  தண்ணீரில் அடித்து செல்லப்பட்டனர்.


இதே போல் கும்பகோணம் பழைய பாலக்கரை பகுதியில் காவிரி ஆற்றில் குளித்து கொண்டிருந்த சஞ்சய் (15) என்ற 10–ம் வகுப்பு மாணவரும் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார்.


இவர்கள் 4 பேரும் தண்ணீரில் மூழ்கி பலியானது தெரிய வந்தது. அவர்களது உடல்களை தேடும் பணியில் கும்பகோணம் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். இந்த நிலையில் நேற்று மாலை கும்பகோணத்தில் பலத்த மழை பெய்ததால் தேடுதல் பணியில் தொய்வு ஏற்பட்டது.


இன்று 2–வது நாளாக தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வந்தது. மாணவர்களின்  பெற்றோர் கரையில் அழுத வண்ணம் சோகத்துடன் நின்றனர்.


தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட மாணவர் சஞ்சயின் உறவினரான திருவிடைமருதூர் முன்னாள் எம்.எல்.ஏ. ராமலிங்கம், கோவி. செழியன் எம்.எல்ஏ. ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டு பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம்  காவிரியில் தண்ணீரை குறைக்குமாறு கேட்டுக் கொண்டனர்.


இதையடுத்து காவிரி ஆற்றில் தண்ணீர் குறைக்கப்பட்டு அரசலாற்றில் திருப்பி விடப்பட்டது. அதன் பின்னர் தேடுதல் பணி நடைபெற்றது.


அப்போது மணஞ்சேரியில் காவிரி ஆற்றின் கரையோரம் முட்புதரில் மாணவர் யாசர் உடல் சிக்கி இருந்தது. அதனை முதலில் தீயணைப்பு வீரர்கள் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.


பின்னர் மற்ற 3 மாணவர்களின் உடல்களும் அடுத்தடுத்து மீட்கப்பட்டது. இதனைப்பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். ஒரே நாளில் 4  மாணவர்கள்  தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் கும்பகோணத்தில்  சோகத்தை  ஏற்படுத்தி  உள்ளது.

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.