அதிராம்பட்டினத்தில் 4 வயது சிறுவன் மர்மச்சாவு. புதைத்த உடல் தோண்டி எடுப்பு.adira+xpiஅதிராம் பட்டினத்தில் மர்மமான முறையில் இறந்த 4 வயது சிறுவனின் புதைக்கப் பட்ட உடலை போலீசார் முன்னிலையில் தோண்டி எடுத்து விசாரணை  மேற்கொள்ளப் பட்டது.


தஞ்சை மாவட்டம், அதிராம் பட்டினம் கீழப்பழஞ்சூரை சேர்ந்தவர் பாலசுப்ரமணியன். இவரது மனைவி சந்திரா(29). திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது. அனுப்ரியா(9), மகாசினி(6) என்ற பெண் குழந்தைகள் உள்ளனர். அபினேஷ்(4)  என்ற  ஆண்  குழந்தையும்  இருந்தான்.


கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் பாலசுப்ரமணியன் இறந்து விட்டார். இதையடுத்து சந்திராவுக்கும், அதிராம் பட்டினம் பிலால் நகரை சேர்ந்த எலக்ட்ரீஷியன்  அப்துல் பாசித்(34) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. அப்துல் பாசித்  ஆட்டோவும்  ஓட்டி வருகிறார்.


இவருக்கு ஏற்கனவே திருமணமாகி செரினா பேகம்(32) என்ற மனைவி உள்ளார். இந் நிலையில் ஒரு ஆண்டுக்கு முன் அப்துல் பாசித் சந்திராவையும், அவரது குழந்தைகளையும் சென்னைக்கு அழைத்து சென்று குடும்பம் நடத்தி வந்தார்.


இது குறித்து அப்துல் பாசித்தின் மனைவி செரினா பேகம் கொடுத்த புகாரின் பேரில் அதிராம் பட்டினம் போலீசார் சென்னை சென்று அப்துல் பாசித்தையும், சந்திரா மற்றும் குழந்தைகளையும்  மீட்டு அதிராம் பட்டினம் அழைத்து வந்தனர்.  அதனை  தொடர்ந்து  செரினா பேகம் சம்மதத்தின் பேரில் அனைவரும் ஒன்றாக அப்துல் பாசித்தின் வீ்ட்டில் குடும்பம் நடத்தி வருகின்றனர்.


இந் நிலையில் கடந்த 5 நாட்களுக்கு முன் அபினேஷ் பாத்ரூமில் வழுக்கி விழுந்ததாக கூறப்படுகிறது.  இதில் அவனது தலையில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. அந்த இடத்தில் காபித் தூளை வைத்து பின்னர் மாத்திரைகள் வாங்கி  கொடுத்துள்ளனர்.


இந் நிலையில் கடந்த  21ம்தேதி  இரவு  அபினேஷ்  திடீரென மயங்கி விழுந்தான். அவனை தனியார் மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். சிறுவனை பரிசோதித்த டாகடர்கள் அவன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.


இதையடுத்து சிறுவனை வீட்டிற்கு கொண்டு வந்தனர். இது குறித்து சந்திராவின் தாய் வேலம்மாளுக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் அவர் கூறியபடி நேற்று முன்தினம் குழந்தையின் சடலத்தை ஏரிப் புறக்கரை சுடுகாட்டில்  புதைத்து விட்டனர்.


இதற்கிடையே நடந்த சம்பவம் குறித்தும், குழந்தையின் சாவில் மர்மம் இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.  டிஎஸ்பி பிச்சை, இன்ஸ்பெக்டர் அன்பழகன், தாசில்தார் சேதுராமன் ஆகியோர் முன்னிலையில்  அபினேசின்  சடலம் தோண்டி எடுக்கப் பட்டது. பின்னர் பிரேத  பரிசோதனை  செய்து  அதே இடத்தில்  உடல் புதைக்கப் பட்டது.


இது குறித்து அதிராம் பட்டினம் போலீசார் வழக்குப் பதிந்து குழந்தை எப்படி இறந்தான் என விசாரணை நடத்தி வருகின்றனர். இச் சம்பவம் அப் பகுதியில் பரபரப்பை  ஏற்படுத்தி  உள்ளது.


adira+xpi


Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.