திருடிய ரூ.5 லட்சத்தை திருப்பிக் கொடுத்த மாணவர்:...... மன்சூர். தாயின் மருத்துவச் செலவுக்காக திருடியதாக வாக்குமூலம்.3a015df0-8054-4b61-b1f5-f2b0807b1159_S_secvpf.gifமருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்த தாயின் மருத்துவ செலவுக்காக ரூ.5 லட்சத்தை திருடியதாகவும், தாய் இறந்து விட்டதால் அதை உரியவரிடமே திருப்பிக் கொடுத்துவிட்டதாகவும் இளைஞர் ஒருவர் போலீஸாரிடம் தெரிவித்துள்ளார்.


புதுக்கோட்டை  பெரியார் நகரைச் சேர்ந்தவர் ஓய்வுபெற்ற துணை வட்டாட்சியர் ராஜ மாணிக்கம்(75). இவரது மனைவி ஒய்வுபெற்ற வருவாய்த் துறை அலுவலர் கார்த்திகாயினி(70).


இவர்கள் இருவரும் ஆகஸ்ட் 24-ம் தேதி அங்குள்ள வங்கிக்குச் சென்று ரூ. 5 லட்சம் பணத்தை எடுத்துக்கொண்டு வீடு திரும்பியுள்ளனர். பின்னர் வீட்டில் தனியாக  இருந்த கார்த்திகாயினியிடம் அங்கு வந்த இளைஞர் ஒருவர் குடிக்க தண்ணீர் கேட்டாராம்.


அப்போது, பணப்பையை வீட்டுக்குள் ஹாலில் வைத்துவிட்டு, மற்றொரு அறைக்குள் சென்று தண்ணீர் எடுத்து வந்து பார்த்த போது, பணப்பையையும் இளைஞரையும்  காணவில்லையாம்.


இதுகுறித்து  கணேஷ் நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.


இந்நிலையில், ராஜமாணிக்கம் வீட்டுக்கு நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் வந்த அதே இளைஞர், தான் வைத்திருந்த ரூ.4.51 லட்சத்தை கொடுத்து விட்டு, திருடியதற்காக தம்பதியிடம் மன்னிப்பு கேட்டதுடன், தான் செலவழித்த தொகைக்கு ஈடாக தான் கொண்டு வந்திருந்த மோட்டார் சைக்கிளை வைத்துக்கொள்ளுங்கள் எனக் கெஞ்சினாராம். இதுகுறித்து போலீஸாருக்கு  ராஜ மாணிக்கம்  தகவல்  தெரிவித்துள்ளார்.


இதையடுத்து, போலீஸார் நடத்திய விசாரணையில், பணத்தை திருடியவர் புதுக்கோட்டை  மாவட்டம் விராலிமலையைச் சேர்ந்த அ. மன்சூர்(20) என் பதும், இவர் திருச்சி அருகேயுள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வருவதும் தெரியவந்தது.


உடல் நிலை சரியில்லாமல் தனியார் மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டிருந்த  தனது தாயின் மருத்துவ செலவுக்குப் பணம் தேவைப்பட்டதால் மன்சூர் திருடியுள்ளார்.


மன்சூரின் தாயார் சிகிச்சை பலனின்றி அடுத்த நாளே (ஆகஸ்ட் 25) இறந்துவிட்டார். எனவே, திருடிய பணத்தை வைத்திருக்க மனமில்லாமல் அவர் திருப்பிக் கொடுத்துள்ளது தெரியவந்துள்ளது. எனினும் மன்சூரிடம் போலீஸார்  விசாரணை  மேற்கொண்டுள்ளனர்.


Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.