சென்னை விமான நிலையத்தில் ஓடுபாதையில் சென்றபோது விமானத்தின்டயர் வெடித்தது : 75 பயணிகள் தப்பினர்.fliசென்னை விமான நிலையத்தில் இன்று காலை 11 மணியளவில் அந்தமான் செல்லும் ‘ஏர் இந்தியா’ விமானம் தயாராக இருந்தது. 75 பயணிகள் அதில் இருந்தனர்.


ஓடு பாதையில் விமானம் சென்றபோது திடீரென வலது பக்க டயர் ஒன்று பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதன் அதிர்வால் விமானம் குலுங்கியது. இதனால்  பயணிகள்  அதிர்ச்சியும்,  பீதியும்  அடைந்தனர்.


உடனடியாக விமானத்தை புறப்பட்ட இடத்திலேயே விமானி மெதுவாக நிறுத்தினார். இதையடுத்து பயணிகள் அனைவரும் பத்திரமாக இறக்கப்பட்டு விமான  நிலையத்தில் தங்க வைக்கப்பட்டனர். அவர்கள் மாற்று விமானத்தில்  செல்வதற்கான  ஏற்பாடுகள்  செய்யப்பட்டு  உள்ளது.


விமானம் ஓடுபாதையில் மெதுவாக சென்றபோது டயர் வெடித்ததால் பெரிய அளவில் விபத்து ஏற்படவில்லை. அதிர்ஷ்டவசமாக பயணிகள் அனைவரும் தப்பினர்.


இச்சம்பவம் விமான நிலைய அதிகாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றி அவர்கள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


 சென்னை விமான நிலையத்தில் ஓடுபாதையில் சென்றபோது விமானத்தின் டயர் வெடித்தது: 75 பயணிகள் தப்பினர்

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.