தனியார் மருத்துவமனையில் ஆபரேஷன் முடிந்து 8 நாளாகியும் சுயநினைவு திரும்பாத சிறுமி.nu110005குடல் இறக்கம் சிகிச்சைக்காக திருச்சி தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்ட குளித்தலை சிறுமிக்கு 8 நாட்களாகியும் சுய நினைவு திரும்பாத நிலையில் இருந்து வருகிறார்.


கரூர் மாவட்டம்  குளித்தலை சின்ன ஆண்டாள் தெருவை சேர்ந்தவர் பிரபு. ஆட்டோ டிரைவர். இவரது மனைவி தேவி. இவர்களுக்கு சக்தீஸ்வரன் (13) என்ற ஒரு  மகனும்,  மதுமிதா (9) என்ற ஒரு மகளும் உள்ளனர்.


4ம் வகுப்பு படித்து வரும் மது மிதா குடல் இறக்கம் சிகிச்சைக்காக கடந்த 20ம் தேதி உறையூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார்.  அங்கு 21ம்தேதி காலை 9 மணிக்கு சிறுமிக்கு அறுவை சிகிச்சை  நடந்தது.


அறுவை சிகிச்சைக்கு பின்னர் 3 நாட்களாகியும் தனது மகளை பெற்றோர் பார்க்க முடியாததால் 23ம் தேதி சம்பந்தப் பட்ட டாக்டரை அணுகி உள்ளனர். மது மிதா  மயக்கத்தில்  இருப்பதால்  கண் முழிக்காமல் உள்ளார்.


தீவிர சிகிச்சை  பிரிவில் தொடர்ந்து இருக்க வேண்டும் என்பதால் ஒத்துழைப்பு  தரும்படி  நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந் நிலையில் நேற்று மதியம் மது மிதாவுக்கு திடீர் என வலிப்பு ஏற்பட்டுள்ளது.


இதை  பார்த்த  அவரது  பெற்றோர் கேட்ட போது, வேறு மருத்துவமனைக்கு மது மிதாவை அழைத்து செல்லுமாறு மருத்துவ மனை தரப்பில் தெரிவிக்கப் பட்டது.


இதில் ஆத்திரம் அடைந்த பெற்றோர், டாக்டர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்ட தோடு,  தனது  மகளை எப்படி  அழைத்து  வந்தானோ. அப்படியே தங்களிடம் மறுபடி ஒப்படைக்க வேண்டும்.


தனது மகளுக்கு எதுாவது விபரீதம்  நடந்தால் மருத்துவ மனை நிர்வாகம் தான் பொறுப்பு. வேறு மருத்துவ மனைக்கு அழைத்து செல்ல முடியாது. நான் இங்கயே  தற்கொலை  செய்து  கொள்வேன்  என  கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.


இது தொடர்பாக பெற்றோர் தரப்பில் உறையூர் போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது.  இதையடுத்து மருத்துவ மனையில் நடந்தது என்ன என்பது குறித்து டாக்டர்கள் மற்றும் பெற்றோரிடம் நேற்று முன் தினம் இரவு போலீசார் விசாரித்தனர்.


விசாரணையில் மூளை நரம்பு மற்றும் மூளை சிகிச்சை மருத்துவர்கள், சிறு மியை பரிசோதித்ததில் மூளை பாதிப்பு ஏற்பட்டு இருந்ததால் 8 நாட்களாகியும் சுய நினைவு  திரும்பாமல்  இருப்பது  தெரிய வந்துள்ளது.


இதை தொடர்ந்து போலீசார் பேச்சு வார்த்தைக்கு பின் சிறுமிக்கு மீண்டும் அதே மருத்துவ மனையில்  தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படும் என மருத்துவ மனைதரப்பில் தெரிவிக்கப் பட்டதை தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு  வருகிறது.


இது குறித்து தந்தை பிரபுவிடம் கேட்ட போது, கடந்த ஒரு மாதத்திற்கு முன் மருத்துவ மனையில்  டாக்டர்களிடம்  தனது மகளை காட்டிய போது குடல் இறக்கம் உள்ளது.


ரூ.22,000 செலவாகும். 3 நாளில் வீடு திரும்பி விடலாம் என டாக்டர்கள் தெரிவித்தனர். நானும் கடன் வாங்கி பணத்தை கட்டி விட்டேன். ஆபரேஷன் முடிந்து 8 நாளாகியும் தனது மகளை வீட்டிற்கு அழைத்து செல்ல முடிய வில்லை.


சுய நினைவு திரும்பாத தனது மகள் நிலை குறித்து டாக்டர்களிடம் கேட்டால் சரியான பதில் இல்லை. செய்த தவறை மறைப்பதற்காக டாக்டர்கள் எங்களை சமாதான படுத்துகின்றனர்.


மகளை குணப்படுத்தி தராவிட்டால் மருத்துவமனை மீது வழக்கு போடுவோம் என்றார்.


விரைவில்  நினைவு  திரும்பி  நலமோடு வாழ அந்த  ஏழைசிறுமிக்காக இறைவனிடம் கையேந்தும்படி  அன்போடு  கேட்டுக்கொள்கிறேன். ..admin.

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.