முத்துப் பேட்டை ரயில் நிலையத்தை B கிரேடுலிருந்து C கிரேடாக குறைக்க முயற்சியா...11947624_396606503863838_2075848834509124467_nமுத்துப்பேட்டை ரயில் நிலையத்தை தரம் குறைத்தால் போராட்டம் நடத்து வோம்  என்று  காங்கிரஸ்  மாவட்ட  தலைவர் துரை வேலன் தெரிவித்துள்ளார்.


முத்துப்பேட்டையில்  மாவட்ட  காங்கிரஸ் கட்சி சார்பில் தொண்டர்கள் சந்திப்பு  நிகழ்ச்சி சட்ட மன்ற பொருப் பாளர் நாச்சிக்குளம் தாகிர் தலைமையில்  நடந்தது.


கள்ளுக் குடியிலிருந்து  முத்துப் பேட்டை நகரம் வரை காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை மாவட்ட காங்கிரஸ் தலைவர் துரைவேலன்  சந்தித்து  கருத்துக்களை  கேட்ட றிந்தார்.


மாவட்ட காங்கிரஸ் தலைவர் துரை வேலன் நிருபர்களிடம் கூறுகையில், . முக்கிய  பிரச்னையான முத்துப் பேட்டை ரயில்வே நிலையம் வெள்ளக் கார ஆட்சியில்  உருவாக்கப் பட்டது.


 ரயில்வே  துறைக்கு அதிக லாபத்தை பெற்று தந்த ஒரு பகுதியாகும். இங்கு பிரபலமான  முத்துப் பேட்டை தர்கா மற்றும் சுற்றுலா தளங்கள் நிறைந்துள்ளது.  அதனால்  பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் தினம் தோறும்  அதிகளவில்  வருகின்றனர்.


தற்போது அகல ரயில் பாதை பணிக்காக இப் பகுதிக்கு வந்த ரயில் நிறுத்தப் பட்டுள்ளது. ஆமை வேகத்தில் பணிகள் நடந்து வருகிறது. இதை விரைந்து முடிக்க வேண்டும்.


மேலும் பி கிரேடாக இருந்த முத்துப் பேட்டை ரயில் நிலையத்தை தரம் குறைத்து சி கிரேடாக மாற்ற ரயில்வே துறை முயற்சி செய்து வருவதாக செய்தி வெளியாகியுள்ளது.


அதன் மூலம் இப் பகுதி மக்கள் பெருமளவில் பயன் பெற வாய்ப் பில்லை. அந்த எண்ணத்தை ரயில்வே துறை கைவிடவேண்டும். அப்படி மீறி தரம் குறைக்க நடவடிக்கை  எடுத்தால்  காங்கிரஸ் கட்சி சார்பில் மக்களை திரட்டி மாபெரும்  போராட்டத்தில்  ஈடு படுவோம்  என்றார்.


Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.