முத்துப்பேட்டை அருகே இருசக்கர வாகன விபத்தில் நூர்முஹம்மது மரணம்



துளசியாபட்டிணத்தை சார்ந்த நூர்முஹம்மது அவர்கள் முத்துப்பேட்டை திமிலத்தெரு நஜ்முதீன் அவர்களின் மருமகன் ஆவார்.


நேற்று  மாலை 7 மணியளவில்  திருத்துறைப் பூண்டியிலிருந்து தனது பணியை முடித்துவிட்டு முத்துப்பேட்டைக்கு திரும்பி கொண்டிருக்கும் போது நாச்சிகுளத்தை அடுத்த கோபால சமுத்திரம் இடையிலான பகுதியில் சாலையில்  இறந்து  கிடந்த  மாட்டின்மேல்  பைக்  மோதியது.


இதில் தூக்கி வீசப்பட்ட இவர் படுகாயமடைந்துள்ளார். தகவலறிந்த நாச்சிக்குளத்தை சேர்ந்த தமுமுக  சகோதரர்கள் அவரை நாச்சிகுளத்தில் கொண்டுவந்து  சோதனையிட்டதில் உயிர் செல்லும் நிலைக்கு சென்றுவிட்டார்.   மேல் சிகிச்சைக்கு கொண்டு செல்லும்  வழியிலேயே... மரணமடைந்தார்....


                         இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னார் அவர்களின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, மார்க்கச் சேவைகளை அங்கீகரித்து, குற்றங்களை மன்னித்து தன்னுடைய ‘ஜன்னதுல் பிர்தௌஸ்’ எனும் உயர்ந்த சுவனத்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தார், உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருள்வானாக.. ஆமீன்.


அன்னாரின் ஜனாஸா துளசியாப்பட்டினத்தில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.


a1

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.