இலவச பொருட்கள் வாங்க வெயிலில் நீண்டநேரம் காத்திருந்த பெண், மயங்கி விழுந்து சாவு.TamilDailyNews_8299785852433இலவச  பொருட்கள் வாங்க வெயிலில் நீண்டநேரம் காத்திருந்த பெண், மயங்கி விழுந்து இறந்தார்.


திண்டுக்கல் மாவட்டம், பழநி அடிவாரம் பகுதியில் உள்ள 4,817 குடும்ப அட்டைகளுக்கு இலவச மிக்சி, கிரைண்டர் வழங்க டோக்கன் வழங்கப்பட்டிருந்தது.


இவர்களுக்கு  பழநி நகராட்சி அலுவலகத்தில் எம்எல்ஏ வேணுகோபாலு இலவச பொருட்களை நேற்று வழங்கினார். இலவச பொருட்களை பெற அதிகாலை முதலே நகராட்சி அலுவலகத்தில் பெண்கள் உட்பட 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குவிந்தனர்.


போதியளவில் நிழற்பந்தல் அமைக்கப்படாததால், கொளுத்தும் வெயிலில் பெண்கள் நீண்டநேரம் காத்திருந்தனர். குடிநீர் போன்ற வசதிகளும் செய்து தரப்படவில்லை.


காலையில் இருந்தே வரிசையில் காத்திருந்த கிருஷ்ணவேணி (42) என்பவர் வெயில் கொடுமை தாளாமல் மதியம் 11 மணியளவில் திடீரென மயங்கி விழுந்தார்.


அருகில் உள்ளவர்கள் அவரை சிகிச்சைக்காக பழநி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே கிருஷ்ணவேணி இறந்தார். தகவலறிந்த பழநி தாசில்தார் மாரியப்பன், அரசு மருத்துவமனைக்கு வந்து விசாரணை நடத்தினார்.


இதுகுறித்து வரிசையில் நின்றவர்கள் கூறும்போது, ‘’இலவச பொருட்கள் வழங்குவதை முறைப்படுத்தாமல், நிழற்பந்தல், குடிநீர் வசதிகள் செய்யாமல், அனைவரையும் ஒரே நேரத்தில் வரச் செய்த அதிகாரிகளின் அலட்சியப் போக்கால்தான் கிருஷ்ணவேணி இறந்தார்’’ என வேதனையுடன் தெரிவித்தனர்.


இச்சம்பவம் பழநியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.