துபாய் நட்சத்திர ஓட்டலில் நடந்த மோதலில் தமிழர் சாவு அரபு நாட்டு வாலிபர் கைது.201508120056465785_The-conflictstar-hotel-in-DubaiTamils-Death_SECVPF.gifதுபாய் நட்சத்திர ஓட்டலில் நடந்த மோதலில் தமிழர் இறந்து போனார். இது தொடர்பாக அரபு நாட்டை சேர்ந்த வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.


துபாயில் ரியல் எஸ்டேட் ஏஜெண்டாக இருந்தவர் மகேந்திரன் யாதவ். தமிழரான இவர் ராமநாதபுரத்தை சேர்ந்தவர். இவர் தனது நண்பர்களுடன் துபாய் நட்சத்திர ஓட்டலில் உணவருந்திக் கொண்டிருந்தார். அவருக்கு அருகில்  உள்ள  இருக்கையில் அமர்ந்து அரபு நாட்டைச்சேர்ந்த வாலிபர் ஒருவர்  தனது  காதலியுடன்  சாப்பிட்டுக்கொண்டிருந்தார்.


அப்போது மகேந்திரன் அவரது நண்பர்களுடன் செல்போனில் போட்டோ எடுத்தார். இதை பார்த்த அரபு நாட்டு வாலிபர், தங்களை படம் பிடிப்பதாக எண்ணி  தகராறு  செய்தார். இந்த  தகராறு  அடிதடியாக மாறியது.


அப்போது அந்த அரபு நாட்டு வாலிபர் மகேந்திரனின் தலையின் பின்புறம் வேகமாக அடித்தார். இதில் மகேந்திரன் மயங்கி விழுந்தார். அதை பார்த்த நண்பர்கள் மற்றும் ஓட்டல் ஊழியர்கள் பயந்து போய் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.


உடனே விரைந்து வந்த ஆம்புலன்ஸ் சிகிச்சை குழுவினர் மயங்கி கிடந்த மகேந்திரனை  ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி  அவர்  இறந்து விட்டார்.


இந்த சம்பவம் தொடர்பாக அரபு நாட்டு வாலிபர் கைது செய்யப்பட்டார். மகேந்திரன் உடல் தமிழகம் கொண்டு செல்லப்பட்டு அவரது சொந்த ஊரான ராமநாதபுரத்தில் இறுதிச்சடங்கு நடைபெறும் என அவரது நண்பர்கள் தெரிவித்தனர்.

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.