மதுரை அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் சாதனை.bf265f6e-aa67-4750-b4e7-0e570194be7f_S_secvpfஎந்திரத்தில் சிக்கி விபத்து ஏற்பட்ட பெண்ணின் கையுடன் மணிக்கட்டை இணைத்து மதுரை அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் சாதனை புரிந்துள்ளார்கள்.


தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்தவர் முனியசாமி. இவரது மனைவி நாகஜோதி (வயது41). இவர் தீப்பெட்டி தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார்.


இந்த நிலையில் பணியின் போது எதிர்பாராதவிதமாக எந்திரத்தில் அவரது கை சிக்கியது. இதில் மணிக்கட்டு பகுதி துண்டானது. உடனடியாக அவரை சிகிச்சைக்காக  தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.


அங்கு டாக்டர்கள் மணிக்கட்டை கையுடன் சேர்க்க முடியாது என கூறியதை தொடர்ந்து கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு நாகஜோதியை  பரிசோதித்த டாக்டர், மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு உடனடியாக கொண்டு செல்லுமாறு கூறினார். மேலும் முதலுதவி சிகிச்சை அளித்த அவர் மதுரை அரசு ஆஸ்பத்திரி டாக்டர்களிடமும் இது குறித்து பேசினார்.


அப்போது  மதுரை அரசு ஆஸ்பத்திரி டீன் ரேவதி கயிலைராஜன் காலதாமதம் இல்லாமல்  வந்தால்  கையை  இணைக்கலாம் என கூறினார்.


இதனை தொடர்ந்து ஆம்புலன்சு மூலம் நாகஜோதி மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டார். ஆனால் அவர் காலதாமதமாக வந்துள்ளார்.


இருப்பினும் அதனை பொருட்படுத்தாமல் அரசு ஆஸ்பத்திரி டீன் ரேவதி கயிலைராஜன், உடல் ஒட்டு உறுப்பு அறுவை சிகிச்சை நிபுணர் வீரசேகரன் மற்றும் மருத்துவ குழுவினர் விரைந்து செயல்பட்டு 8 மணி நேரம் போராடி நாகஜோதியின் மணிக்கட்டை கையுடன் இணைத்தனர். நேற்று இரவு முதல் வழக்கம்போல்  நாகஜோதியின்  கை  செயல்பட தொடங்கியது.


இதுகுறித்து அரசு ஆஸ்பத்திரி டீன் ரேவதி கயிலைராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:–


மதுரை அரசு ஆஸ்பத்திரியில் பல்வேறு அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளன. காலதாமதமாக கொண்டு வரப்பட்ட பெண்ணுக்கு கையுடன்  மணிக்கட்டை அறுவை  சிகிச்சை மூலம் இணைத்து இருப்பது அரிய வகை  சிகிச்சை  ஆகும்.


இதனை சிறப்பாக செய்த அறுவை சிகிச்சை நிபுணர் வீரசேகரன், நரம்பியல் மற்றும் எலும்பு முறிவு மருத்துவர்கள், மருத்துவக் குழுவினருக்கு பாராட்டு தெரிவித்துக்கொள்கிறேன்.  நேற்று முதல் நாகஜோதியின் கை விரல்கள் சீறிய  முறையில்  செயல்பட்டு  வருகிறது.  இவ்வாறு அவர் கூறினார்.

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.