திருவாரூரில் வாகன சோதனையில் துப்பாக்கி வைத்திருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.kallaதிருவாரூர் டவுன் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) செந்தில்குமார் தலைமையில் போலீசார் நாகை பைபாஸ் சாலை நகர எல்லையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது திருவாரூர் நோக்கி ஒரு மோட்டார்சைக்கிள் வேகமாக வந்தது.


இந்த மோட்டார் சைக்கிளை சந்தேகத்தின் பேரில் போலீசார் வழிமறித்து நிறுத்தினர். அப்போது மோட்டார் சைக்கிளின் பின்னால் உட்கார்ந்து வந்த 2 வாலிபர்கள் தீடீரென இறங்கி தப்பி ஓட்டம் பிடித்தனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த வாலிபரை சுற்றி வளைத்து பிடித்து மோட்டார் சைக்கிளை சோதனையிட்டனர்.


அப்போது மோட்டார் சைக்கிள் டேங்க் கவரில் உரிமம் இல்லாத ஒரு துப்பாக்கி இருந்தது. இதில் 5 குண்டுகள் இருந்தன. இதனால் திடுக்கிட்ட போலீசார் அந்த வாலிபரிடம்  தொடர்ந்து  விசாரணை  நடத்தினர்.


 விசாரணையில் பிடிபட்ட நபர் காரைக்கால் கோவில்பத்து பகுதியை சேர்ந்த பாண்டியன் மகன் சிவா என்கிற சிவநேசன் (வயது24) என்பது தெரியவந்தது. கடந்தாண்டு நாகூரில் சத்திய மூர்த்தி என்பவர் கொலை செய்யப் பட்ட வழக்கில் இவருக்கு தொடர்புடையதும் தெரிய வந்தது.


திருவாரூர் பகுதியில் ஏதேனும் அசம்பாவிதத்தில் ஈடு பட சிவநேசன் துப்பாக்கியுடன்  வந்தாரா என்று அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். இதுகுறித்து திருவாரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவநேசனை கைது செய்து, துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.


இதில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பி ஓடிய காரைக்காலை சேர்ந்த சுந்தர், நாகப்பட்டினத்தை சேர்ந்த ஜீவா ஆகிய  இருவரையும்  போலீசார்  தேடி  வருகின்றனர்.


kalla

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.