முத்துப்பேட்டை வார சந்தையில் பிளாஸ்டிக் பைகள் பறிமுதல். அதிகாரிகள் நடவடிக்கை.11873545_406588959538738_6803057516305666338_nமுத்துப்பேட்டை  பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சென்ற ஆகஸ்ட் 15 முதல் பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் பைகளுக்கு பேரூராட்சி நிர்வாகத்தால் முற்றிலும் தடை செய்யப்பட்டது.


அதன்படி நகர முழுவதும் விளம்பர வாகனங்கள் மூலமும், விழிப்புணர்வு பிரச்சாரம் மூலமும் அறிவுறுத்தப்பட்டது. இந்த நிலையில் நேற்று வியாழக்கிழமை வார சந்தையில் பேரூராட்சி செயல் அலுவலர் கண்மணி தலைமையில்  அதிகாரிகள்  கடைகளில்  அதிரடி சோதனை நடத்தினர்.


இதில்  கடைகளில்  பயன்படுத்திய பாலிதீன் பைகள் கிலோ கணக்கில் பறிமுதல் செய்யப்பட்டன. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து பேரூராட்சி செயல் அலுவலர் கண்மணி கூறுகையில்: முத்துப்பேட்டை பேரூராட்சி உட்பட்ட பகுதியில் பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் பைகள் இல்லாத பகுதியாக மாற்ற கடந்த ஆகஸ்ட் 15 முதல் பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் பைகளுக்கு தடை செய்யப்பட்டது.


அதன்படி  வியாழன் வார சந்தையில் அதிரடி சோதனை நடத்தி பாலிதீன் பைகள்  கைபற்றப்பட்டது. விரைவில் கடைத்தெருக்களிலும் அதிரடி சோதனை  நடத்தப்படும். வியாபாரிகள் பாலிதீன் பைகளை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் என்றார்.


படம் & செய்தி: மு. முகைதீன்பிச்சை.


11873545_406588959538738_6803057516305666338_n


Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.