எமிரேட்ஸ் விமானப் பணிப்பெண்ணுக்கு குத்துவிட்டவர் சீட்டோடு கட்டிவைத்து போலீசாரிடன் ஒப்படைப்பு.bdc0a626-593d-4a8d-9286-21ca80d70614_S_secvpf.gifவிமான  இருக்கையில்  நீட்டி, சாய்ந்துப் படுக்க வசதியில்லை என்று தகராறு செய்ததுடன், விமானப் பணிப்பெண்ணின் முகத்தில் குத்துவிட்ட பயணியை மடக்கிப் பிடித்த சகப்பயணி மற்றும் பணியாளர்கள் அவரை இருக்கையோடு  சேர்த்து,  கட்டிவைத்து  போலீசாரிடம் ஒப்படைத்தனர்.


துபாயில் இருந்து ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகருக்குச் சென்று கொண்டிருந்த  எமிரேட்ஸ் விமானத்தில் வந்த ஒரு பயணி, தனது இருக்கையை  பின்நோக்கி சாய்த்து, சொகுசாக படுத்தபடி பயணிக்க நினைத்து, அவ்வாறு செய்ய முயன்றார்.


இது, பின்இருக்கையில் அமர்ந்திருந்த பயணிக்கு அசவுகரியத்தை ஏற்படுத்தவே, இது தொடர்பாக அவர் விமானப் பணிப்பெண்ணிடம் முறையிட்டார்.


உடனடியாக, முன்இருக்கையில் அமர்ந்திருந்த பயணியிடம் சென்ற பணிப்பெண், மற்றவர்களுக்கு தொந்தரவு தராத வகையில் உங்கள் இருக்கையில்  சாய்ந்து,  ஓய்வெடுங்கள் என்று அவரிடம் அன்பாக கூறினார்.


செவித்திறன் குறைவால் (கேட்கும் திறன்) பாதிக்கப்பட்டிருந்த அந்த நபர், பணிப்பெண் கூறுவதை சரியாக புரிந்துக் கொள்ளாமல் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். சற்றும் எதிர்பாராத நிலையில், அவருக்கு விளக்கம்  அளித்துக் கொண்டிருந்த பணிப்பெண்ணின் முகத்தில் அந்தப் பயணி  ஓங்கி  ஒரு  குத்துவிட்டார்.


இதனால், நிலைகுலைந்த பணிப்பெண், தலை கிறுகிறுத்து கீழே சாய்ந்தார். இதைக் கண்டு பதறிப்போன பயணிகளில் ஒருவர், அடித்த நபரை மடக்கிப் பிடித்தார். விபரம் அறிந்து ஓடிவந்த சக விமானப் பணியாளர்கள் ஒன்றாக சேர்ந்து  அந்நபரின்  கை, கால்களை ஒரு கேபிளால் இணைத்துக் கட்டினர்.


அவரை குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று இருக்கையில் அமர்த்தி, சீட் பெல்ட்டால் இறுகக் கட்டினர். அதில் இருந்து விடுபட்டு வருவதற்காக திமிறிக் கொண்டிருந்த அவரது நிலையைக் கண்டு, மேலும் ஒரு சீட் பெல்ட்டால் அவரை அசைய விடாமல் கட்டி வைத்தனர்.


பயணியாக  வந்து விமானத்தில் ஏறி, அடாவடிச் செயலால் பிணைக்கைதியாக மாறிப்போன அவரை அந்த விமானம் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் தரையிறங்கியதும் விமானப் பணியாளர்கள் போலீசாரிடம்  ஒப்படைத்தனர்.

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.