இந்தோனேஷிய விமானம் மலையில் மோதி நொறுங்கியது.150816071505-missing-plane-route-large-169இந்தோனேஷியாவில் 54 பேருடன் சென்ற விமானம் திடீரென மாயமானதை அடுத்து அந்த விமானத்தை தேடும் பணி மிகத் தீவிரமாக நடந்து வந்தது.


இந்நிலையில், இந்த விமானம் மலையின் மீது மோதி விபத்துக்குள்ளானது என்றும் அதன் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்றும் போக்குவரத்துத்துறை  மந்திரி  தெரிவித்துள்ளார்.


இந்தோனேஷியாவின் ஜெயபுரா நகரில் உள்ள சென்தானி விமான நிலையத்தில்  இருந்து பப்புவா மாகாணத்தில் உள்ள ஒக்சிபில் நகருக்கு இன்று ஒரு விமானம் புறப்பட்டு சென்றது.  திரிகானா விமான சேவை நிறுவனத்துக்கு சொந்தமான ஏ.டி.ஆர். 42–300 ரகத்தை சேர்ந்த அந்த விமானத்தில் 5 குழந்தைகள் உட்பட 49 பயணிகள் மற்றும் 5 ஊழியர்கள் என மொத்தம் 54  பேர் பயணம்  செய்தனர்.


பப்புவா பிராந்தியத்தில் அடர்ந்த வனப்பகுதிக்கு மேலே அந்த விமானம் பறந்து கொண்டிருந்த போது, அதனுடன் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. விமானம் திடீரென்று மாயமானது. இதைத்தொடர்ந்து, இந்தோனேஷிய தேடுதல் மற்றும் மீட்புக்குழுவினர், காணாமல் போன விமானத்தை தேடி கண்டுபிடிக்கும் பணியில்  ஈடுபட்டு  கொண்டிருந்தனர்.


இந்நிலையில், இந்த விமானம் இந்தோனேஷியாவின் பப்புவாவில் ஒக்பேப் என்ற மாவட்டத்தில் உள்ள மலையில் மோதி விழுந்ததாகவும் அதன் பாகங்களைக் கண்டெடுத்துள்ளதாகவும், அந்நாட்டு விமான போக்குவரத்து மந்திரி  சுப்ரசெத்யோ  தெரிவித்துள்ளார்.


கண்டுபிடிக்கப்பட்ட பாகங்களை அதிகாரிகள் பரிசோதித்து வருகின்றனர். ஆனால் விமானத்தில் பயணம் செய்த யாரும் உயிர் பிழைத்தார்களா என்பது குறித்து  இதுவரை  எந்த தகவலும்  இல்லை.

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.