எம்.சி.ஏ படித்து விட்டு கொத்தனார் வேலை செய்யும் ஏழை மாணவன்.i3.phpசேலத்தில் எம்.சி.ஏ. முதுகலை பட்டப்படிப்பை முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ள  ஏழை  மாணவர் ஒருவர்  கொத்தனார்  வேலை  செய்து  வருகிறார்.


எடப்பாடி அருகே வசித்து வரும் கூலித்தொழிலாளி மலர்மன்னன், மனைவி பழனியம்மாள்  தம்பதிக்கு சவுந்தர ராஜன் (23), அருண்ராவ் மைக்கல் (20) ஆகிய  2  மகன்கள்  உள்ளனர்.


சவுந்தரராஜன் தற்போது எம்.சி.ஏ. முதுகலை பட்டப்படிப்பு படித்து முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளார், அருண்ராவ் மைக்கல் பி.பி.ஏ. படித்து வருகிறார்.


படித்த படிப்புக்கு வேலை கிடைக்கவில்லை என்று எண்ணாமல் தற்போது கொத்தனார்  வேலை  செய்து  வருகிறார் சவுந்தரராஜன்.


இதுகுறித்து அவர் கூறுகையில், எனது அப்பாவின் சொற்ப வருமானத்தில் குடும்பம்  நடத்துவதே மிகுந்த கஷ்டமான சூழ்நிலை நிலவிய போதும் எங்களை  நன்கு படிக்க வைக்க வேண்டும் என்பது அவரது ஆசை.


பல முறை நான் பள்ளிப் படிப்பை தொடர முடியாத நிலை உருவான போதும் மனம் தளராமல் கட்டிட வேலைக்கு சென்று எனது பள்ளி படிப்பை முடித்தேன்.


12ம் வகுப்பு முடித்தவுடன் பி.எஸ்.சி. கம்யூட்டர் சயின்ஸ் படித்து முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்ற நான், திருச்செங்கோட்டில் உள்ள தனியார் கல்லூரியில்  எம்.சி.ஏ.  படித்து  அதிலும்  வெற்றி  பெற்றேன்.


இதையடுத்து கோயமுத்தூர், பெங்களூர், சென்னை உள்ளிட்ட நகரங்களில் வேலை தேடி அலைந்த போது, சில நிறுவன்ங்கள் முன் அனுபவம் இல்லை என்று  கூறியும், சிபாரிசு கடிதம் வேண்டும் என்று கூறியும் என்னை வேலைக்கு எடுக்க மறுத்தனர்.


முடிவில் நான் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வினை எழுதி வெற்றி  பெற  முழு முனைப்பாக உள்ளேன்.


அதனால் பல ஆண்டுகளாக பகுதி நேரமாக செய்து வந்த கொத்தனார் வேலையை  தற்போது முழு நேரமாக செய்து வருகிறேன் என்றும் நிச்சயம் ஒரு நாள்  வெற்றி  பெறுவேன் எனவும்  தெரிவித்துள்ளார்.

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.