முத்துப்பேட்டை அருகே புதிதாக கட்டிய வீட்டின் மேற்கூரைக்கு தீ வைப்பு.20150812c_01810600401முத்துப் பேட்டை அடுத்த மலையா கணபதி நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன்(62). இவருக்கு சொந்தமான இடம் பாமினி ஆற்று மேல் கரையில் உள்ளது. இந்த இடத்தில் புதிதாக வீடு கட்டி மேல் புறம் கீற்று கூரை அமைக்கப்பட்டுள்ளது.


பெரும்பாலான பணிகள் முடிக்கப் பட்டிருந்தது. இந் நிலையில் நேற்று முன்தினம் இரவு புதிய வீட்டு பணியை முடித்து விட்டு ராஜேந்திரன், அவரது குடும்பத்தினர் பழைய வீட்டிற்கு சென்று விட்டனர்.


நேற்று காலை அப் பகுதியினர் பார்த்த போது வீட்டின் மேற் கூரை முற்றிலும் எரிந்து கிடந்தது. இது குறித்து தகவலறிந்த ராஜேந்திரன் புதிதாக கட்டப்பட்ட வீடு எரிந்து போனதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். இது குறித்து முத்துப் பேட்டை காவல் நிலையத்தில் ராஜேந்திரன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.


ராஜேந் திரன் கூறும் போது, யாரோ மர்ம நபர்கள் தீ வைத்து எரித்து விட்டனர் என்றார். இப் பகுதியில் இரு சமூகத்தினரிடையே அடிக்கடி மோதல் சம்பவங்கள் நடை பெற்று வரும் நிலையில் இச்சம்பவம் பரபரப்பையும், பதற்றத்தையும்  ஏற்படுத்தி  உள்ளது.

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.