முத்துப்பேட்டை அருகே கோயிலுக்கு சொந்தமான நிலத்தை பிளாட் போட்டு விற்க முயற்சி.Evening-Tamil-News-Paper_59955561162முத்துப் பேட்டை அடுத்த குன்னலூர் பகுதியில் வேதாரண்யம் கோயிலுக்கு சொந்தமான விளை நிலங்கள் உள்ளன. பல ஆண்டுகளாக அப்பகுதியைச் சேர்ந்த  விவசாயிகள்  சாகுபடி  செய்து  வருகின்றனர்.


தற்போது அவர்களில் சிலர் கோயிலுக்கு சொந்தமான சாகுபடி நிலங்களை பிளாட்  போட்டு விற்பனை செய்தும், பலர் கட்டிடங்கள் கட்டியும் வருகின்றனர்.  இதை கோயில் நிர்வாகம் கண்டு கொள்வதில்லை.


இந்நிலையில் பாண்டி அணையிலிருந்து குன்னலூர் பாசனத்திற்கு வரும் பாசன  வாய்க்காலை  அப்பகுதியைச் சேர்ந்த தனியார் ஒருவர் தனது செலவில் தூர் வாருவதாக கூறி அதிலிருந்து சுமார் 100 மீட்டர் தூரத்திற்கு  சுமார் 15 அடி ஆழத்தில் மணலை வெட்டி எடுத்து அதே பகுதியில் தனது அனுபவத்தில் உள்ள கோயிலுக்கு சொந்தமான வயலில் நிரப்பி வருகிறார்.


அந்த இடத்தை பிளாட் போட்டு விற்பனை செய்வதற்காக பணி நடைபெறுவதாக கூறப்படுகிறது. இதனை பொதுப் பணிதுறை மற்றும் வருவாய்  துறையினரும்,  கோயில்  நிர்வாகமும்  கண்டு கொள்ளவில்லை.


இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த விவசாயி சேகர் கூறுகையில், இப் பகுதியை சேர்ந்த ஆளுங்கட்சி பிரமுகர்கள் ஆதரவுடன் வருவாய் துறை அதிகாரிகளையும் கவனித்து, தனியார் ஒருவர் துணிச்சலாக அரசுக்கு சொந்தமான பாசன வாய்க்காலில் மணலை கொள்ளையடித்து தனது அனுபவத்தில் உள்ள கோயிலுக்கு சொந்தமான இடத்தை பிளாட் போட்டு விற்பனை  செய்ய  முயற்சித்து  வருகிறார்.


இதனை  கலெக்டர் மற்றும் கோயில் நிர்வாகமும் தடுத்து நிறுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் விவசாயிகள் சேர்ந்து போராட்டம்  நடத்த  வேண்டிய  நிலை  ஏற்படும்  என்றார்.


தினகரன்...


Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.