கணவருடன் மோட்டார் சைக்கிள் சென்றபோது துப்பட்டா சிக்கி பெண் பலி.201508250249065595_MotorcycleAt-the-wheelDupatta-stuckWomanKills_SECVPF.gifகணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்றபோது துப்பட்டா சக்கரத்தில் சிக்கிய விபரீத சம்பவத்தில் பெண் உயிரிழந்தார். அப்போது மடியில் இருந்த  தனது  10 மாத குழந்தையை காப்பாற்றி உயிரை விட்ட சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியது.


மும்பையை அடுத்த பால்கர் மாவட்டம், பொய்சர் அருகே உள்ள ஆலேவாடி கிராமத்தில்  வசித்து  வந்தவர் ஆகாஷ். இவரது மனைவி பிரனாலி (வயது 25).  இவர்களுக்கு 2 வயது மகனும், ஸ்வாரா என்ற 10 மாத பெண் குழந்தையும் உள்ளனர். இவர்களது சொந்த ஊர் அங்கிருந்து 16 கி.மீ. தொலைவில்  உள்ள  தான்டி ஆகும். அங்குள்ள பாட்டி வீட்டில் அவர்களது மகன் தங்கியிருந்தான்.


இந்த  நிலையில் ஆகாஷ் தனது மனைவி, 10 மாத பெண் குழந்தையுடன் சொந்த ஊருக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். குழந்தையை  தாய் மடியில் வைத்திருந்தார். அவர்கள் நவாப்பூர் நாக்கா அருகே  சென்றுகொண்டு  இருந்தனர்.


அப்போது  பிரனாலியின் துப்பட்டா திடீரென மோட்டார் சைக்கிளின் சக்கரத்தில் சிக்கியது. இதனால் கைக்குழந்தையுடன் மோட்டார் சைக்கிளில் இருந்து அவர் கீழே விழுந்தார். அவரை மோட்டார் சைக்கிள் 15 மீட்டர் தூரம் இழுத்து சென்றது.


அப்போது தனது மடியில் இருந்த குழந்தையை காப்பாற்ற மார்போடு கட்டி அணைத்து கொண்டார்.  ஆனால்  அவரது கழுத்தை  துப்பட்டா இறுக்கியது. மூச்சு திணறி உயிருக்கு போராடும் நிலையை அடைத்தார். அப்போது கூட குழந்தையை  காப்பாற்றுவதிலேயே இலக்காக இறுக்க அணைத்து கொண்டார்.


பதறி போன ஆகாஷ் மோட்டார் சைக்கிள் நின்றதும் மனைவி, குழந்தையை காப்பாற்ற முயன்றார். குழந்தை ஒரு சிராய்ப்பு கூட இல்லாமல் உயிர் தப்பி இருந்தது.  ஆனால்  மனைவி  பிரனாலி நிலைகுலைந்து  போய் கிடந்தார்.


மனைவியை மீட்டு அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். ஆனால் துப்பட்டா கழுத்தை இறுக்கியதில் பிரனாலி உயிரிழந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.


மோட்டார் சைக்கிளில் சென்றபோது  துப்பட்டா கழுத்தை இறுக்கி இளம்பெண் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியை சோகத்தில் ஆழ்த்தியது. மேலும் தன் உயிரை விட்டு குழந்தையை காப்பாற்றிய தாயுள்ளத்தை கண்டு அனைவரும்  நெகிழ்ந்து  கண்ணீர் விட்டனர்.


இந்த சம்பவம் குறித்து தாராப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.