சவுதியில் வாஷிங் மெஷினுக்குள் விழுந்து சிக்கிய குழந்தையை காப்பாற்றிய வீடியோ இணைப்பு.MOON TV_20150826_0457.ts_snapshot_03.31_[2015.08.26_22.35.49]சவுதி அரேபியாவில் விளையாடும்போது வீட்டில் இருந்த வாஷிங் மெஷினுக்குள் தவறிவிழுந்து சிக்கிக்கொண்ட 3 வயது பெண் குழந்தையை உயிருடன்  காப்பாற்ற அந்நாட்டின் பாதுகாப்பு படையினர் நடத்திய போராட்டம், 'வைரல்' புகைப்படங்களாக சமூக வலைத்தளங்களை கலக்கி வருகின்றது.


பலமணி நேர போராட்டத்துக்கு பின்னர், வாஷிங் மெஷினை வெட்டி அந்த குழந்தையின் உயிரை காப்பாற்றிய பாதுகாப்பு படையினருக்கு பாராட்டு மழையும், அந்த குழந்தைக்கு இந்தகதி ஏற்பட காரணமாக இருந்த தாயின் அஜாக்கிரதைக்கு  வசை  மழையும் பெருகி வருகின்றது.


அந்த தாய்க்கு ஆதரவாக கருத்து தெரிவிக்கும் சில தாய்மார்கள், 'சில குழந்தைகள்  எப்போதும் துறுதுறுவென குறும்பு வேலைகளை செய்வதிலேயே குறியாக இருக்கும்போது, நாம் எவ்வளவு கண்டித்தாலும், விளையாட்டு  புத்தியில் இதைப்போல் ஆபத்தில் சிக்கிக் கொள்கின்றன' என்றும் கூறி வருகின்றனர்.


Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.