பேஸ்புக்கில் சர்ச்சைக்குரிய வீடியோ: பதிவேற்றம் செய்தவர் மீது வழக்கு பதிவு.untitledபிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஒரு குறிப்பிட்ட மதத்துக்கு எதிராக சர்ச்சைக்குரிய வீடியோவை சமூக வலைதளமான பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்த  நபர்  மீது  உத்தரபிரதேச மாநில போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


உத்தரபிரதேச மாநிலம் ஆப்ஸ்கலார் என்ற இடத்தை சேர்ந்த ஜிசான் என்பவர் மீது மத நல்லிணக்கத்துக்கு ஊறு விளைவித்தல், பல்வேறு சமூகங்களுக்கிடையே  வெறுப்புணர்வை பரப்புதல், ஆகிய குற்றச்சாட்டுகளின்  கீழ் ஐபிசி பிரிவு 153A மற்றும் 504A ஆகிய பிரிவுகளில் வழக்கு  பதிவு  செய்யப்பட்டுள்ளது.


குற்றம் சாட்டப்பட்டுள்ள ஜிசான் கடந்த சில வருடங்களாக குவைத்தில் வசித்து வருவதாகவும், திருமணத்திற்காக கடந்த 10 மாதங்களுக்கு முன் இந்தியா வருகை தந்த அவர், தற்போது குவைத்தில் வசித்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.