மதுரையில் இணையத்தால் இணைந்த உயரம் குறைந்த ஜோடி.11926002_1169981866351758_5189586693558086422_nகுள்ளமான பட்டதாரி மணமக்களுக்கு மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நேற்று திருமணம் நடந்தது.


மதுரை, புதூர் மண்மலைமேட்டை சேர்ந்தவர் மருதுமுருகேசன். தமிழ்நாடு உணவு பொருள் வழங்கல் துறை கண்காணிப்பாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.


இவரது  மனைவி ஜானகி.  இவர்களுக்கு 3 மகன்கள். மூன்றாவது மகன் ஸ்ரீராம்ஜி (27). இவரின் உயரம் இரண்டரை அடிதான். இவர் பிபிஏ பட்டதாரி. மதுரையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.


இவர் இணையதளம் மூலமாக தனது உயரத்திற்கு ஏற்ற தோற்றமுள்ள குள்ளமான பெண்ணை தேடி வந்தார். அதுபோலவே குள்ளமான பெண் கிடைத்தது.


மராட்டிய மாநிலம், தானே மாவட்டத்தில் உள்ள அம்பர்நாத் பகுதியை சேர்ந்த துளசிதாஸ் - சசிகலா தம்பதியரின் மகள் யோகிதா (27). இவர் 3 அடி உயரம் கொண்டவர். பிஏ பட்டதாரி. இருவரது குடும்பமும் சந்தித்து பேசி, மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டது.


அதன்படி  நேற்று முன்தினம் இரவு புதூரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நிச்சயதார்த்தம் நடந்தது. நேற்று காலை மணமக்கள் மீனாட்சி அம்மன் கோயிலுக்கு அழைத்து வரப்பட்டனர்.


அங்கு திருமணம் நடந்தது. இரு வீட்டு உறவினர்களும் மணமக்களை வாழ்த்தினர்.  மணமகனின்  தந்தை  மருதுமுருகேசன் கூறுகையில்,


‘‘இணையம் மூலம் பெண் தேடி வந்தோம். இப்போது இருவரும் இணைந்துள்ளனர். பெண் வீட்டாரிடம், எந்த வரதட்சணையும் பெறவில்லை. இருவரும்  ஒருவருக்கு ஒருவர் புரிந்து கொண்டு வாழ்க்கையை சந்தோஷமாக நடத்த வேண்டும்.


உயரக் குறைபாடு இருப்பினும், வாழ்வில் உயர்ந்திட அனைவரது வாழ்த்துக்களும்  இவர்களுக்கு இத்திருமணத்தில் கிடைத்தது. பெற்றோர் என்ற முறையில்  இருவீட்டாருக்கும்  மகிழ்ச்சி தந்துள்ளது,’’  என்றார்.


11926002_1169981866351758_5189586693558086422_nTamilDailyNews_1970592737198

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.