திருச்சியில் ஓமன், குவைத்து நாட்டிற்கு இயந்திரம் இயக்குபவர், டிரைவர் பணி தேர்வு.Job-Vacancy_2ஓமன்,  குவைத்தில் இயந்திரம் இயக்குபவர், டிரைவர் பணிக்கு ஆட்கள் தேர்வு  செய்யப் பட உள்ளனர். வரும் 30ம் தேதி முதல் கட்ட தேர்வு நடக்கிறது.


நாகை மாவட்ட  வேலை வாய்ப்பு  அலுவலர்  கேசவன்  வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:


ஓமன் நாட்டில் உள்ள ஒரு முன்னணி நிறுவனத்திற்கு 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் 2 ஆண்டு பணி அனுபவத்துடன்  22 முதல்  32 வயதிற்குட்பட்ட இயந்திரம் இயக்குபவர்கள் தேவைப் படுகிறார்.


மேலும் குவைத் நாட்டில் இந்திய தொலை தொடர்பு திட்டப் பணிகளுக்கும் 8ம் வகுப்பு தேர்ச்சியுடன் 22 முதல் 35 வயதிற்குட்பட்ட  கேபிள் பொருத்துவதற்கான பள்ளம் தோண்டுதல் பணியில் 2 ஆண்டுகள் பணி அனுவம் பெற்ற லேபர்கள், செல்லத் தக்க குவைத் ஓட்டுனர் உரிமம் வைத்துள்ள கனரக வாகன ஓட்டுனர்கள், இந்திய ஓட்டுனர் உரிமம் வைத்துள்ளவர்கள் தேவைப் படுகிறார்கள்.


இந்திய கனரக ஓட்டுனர் உரிமம் வைத்துள்ளவர்கள் குவைத் கனரக ஓட்டுனர் உரிமம்  பெறும்  வரை  அவர்கள்  லேபராக  பணியாற்ற வேண்டும். தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு தகுதி மற்றும் அனுபவத்திற்கு ஏற்ப ஊதியம், இலவச விமான டிக்கெட்,  இருப்பிடம்,  தொடர்புடைய நாட்டின் சட்டத் திட்டத்திற்கு ஏற்ப இதர சலுகைகள் வழங்கப்படும்.


பணியிடங்கள் தொடர்பான விரிவான விவரங்கள், ஊதிய விவரங்கள் இந் நிறுவன  இணையத்  தளத்தில் அறிந்து கொள்ளலாம்.


மேற்கண்ட  பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஒரிஜினல் பாஸ்போர்ட், தங்களின் சுய விவரங்கள் அடங்கிய விண்ணப் பத்துடன் கல்வி, அனுபவம், பாஸ் போர்ட் ஆகியவற்றின் 2 நகல்கள், நீல நிறப்பின்னணியில் எடுக்கப் பட்ட 5 புகைப் படத்துடன், திருச்சி மன்னார் புரத்தில் உள்ள மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில்  வருகிற  30ம் தேதி (ஞாயிறு) காலை 9 மணி முதல் நடை பெறும் முதற் கட்ட தேர்வில் கலந்து கொள்ள வேண்டும்.


மேலும் விவரம் அறிய 044 225058886, 22502267, 08220634389 ஆகிய தொலை பேசி எண்களை தொடர்பு கொள்ளலாம். இந்த விபரங்களை வேலை வாய்ப்பு அலுவலர்  கேசவன்  தெரிவித்துள்ளார்.

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.