அபுதாபியில் கள்ள நோட்டு கொடுத்து ஆடு வாங்கியவன் அந்த ஆட்டின் உதவியால் கைது.d03f1a53-c0bc-41b8-ba32-48937e52d168_S_secvpf.gifகள்ள நோட்டு கொடுத்து ஆடு வாங்கியவன் அந்த ஆட்டின் உதவியால் கைது செய்ய பட்ட சம்பவம்  அபுதாபியில் நடந்துள்ளது.


இங்கு வேலைசெய்து வந்த வங்காளதேசத்தை சேர்ந்த சுமார் 40 வயது மதிக்கத்தக்க நபர் அபுதாபியில் வசிக்கும் பெண்ணிடம் இருந்து இரண்டு செம்மறி  ஆடுகளை  சமீபத்தில் விலைக்கு வாங்கினார்.


இந்த பரிவர்த்தனையில் அவர் அளித்த 100 திர்ஹம் நோட்டுகள் அனைத்தும் கள்ளநோட்டுகள் என அறியவந்த அந்த 65 வயதுப் பெண், இது தொடர்பாக போலீசில் புகார் அளித்தார்.


ஆடுகளை வாங்கிச் சென்ற வங்காளதேச ஆசாமியின் முக அமைப்பு அல்லது அங்க அடையாளம் பற்றி ஏதாவது விவரிக்க முடியுமா? என அவரிடம் போலீசார் விசாரித்தபோது, மலங்க, மலங்க விழித்த அவர், உதட்டை பிதுக்கியவாறு  கையை  விரித்தார்.


எனினும்,  அவரது  மூளையில்  ஒரு  சிறுமின்னல் பொறி தட்டியது. அந்த ஆளைப் பற்றி அவ்வளவு விளக்கமாக கூற முடியாது. ஆனால், என்னுடைய இரண்டு ஆடுகளில் ஒன்றின் பெயர் நஜ்தி, செந்நிற ரோமத்துடன் ஒல்லியாக இருக்கும். மற்றொன்றின் பெயர் நய்மி, கொழுகொழுவென்று பெரிய, கூரிய கொம்புடளுடன்  இருக்கும்  என  போலீசாரிடம்  அவர்  தெரிவித்தார்.


இந்த அடையாளங்களை வைத்து, கள்ளநோட்டு மாற்றிய குற்றவாளியை தேடிவந்த போலீசார், இரு தினங்களுக்கு முன்பு அங்குள்ள பிரபல வாரச் சந்தையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆசிய வம்சாவளியைச்  சேர்ந்த ஒருவர் இரண்டு ஆடுகளை மட்டும் விற்பனைக்காக  வைத்துக்  கொண்டு  நிற்பதை  அவர்கள்  கண்டனர்.


சந்தேகத்துடன் அவனை நெருங்கிய போலீசார், அந்த இரண்டு ஆடுகளுக்கும் என்ன விலை வேண்டும்? என்று கேட்டனர். 2 ஆயிரம் திர்ஹம் கொடுத்தால் போதும் என அவன் பேரம் பேசுவதற்குள், அந்த ஆடுகளின் அங்க அடையாளங்கள் புகார் அளித்த பெண் கூறியது போலவே இருந்ததால், ஆடுகளுடன்  அவனை  போலீஸ்  நிலையத்துக்கு  அழைத்துச்  சென்றனர்.


இதற்கிடையே, ஆடுகளை விற்ற பெண்ணுக்கும் தகவல் அளிக்கப்பட்டதையடுத்து  அவரும்  போலீஸ்  நிலையத்துக்கு விரைந்து வந்தார்.


அவரைக் கண்டதும் ஆனந்தத்தில் ஆடுகள் துள்ளிக் குதித்தன. தன்னிடம் கள்ளநோட்டுகளை தந்துவிட்டு ஆடுகளை ஓட்டிச் சென்றவன் இவன்தான் என்று அந்தப் பெண் அடையாளம் காட்டியதையடுத்து  அந்நபரை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்துள்ளனர்.


அவனிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஆடுகள் அந்தப் பெண்ணிடமே மீண்டும் ஒப்படைக்கப்பட்டன.

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.