திருச்சியில் துபாய்க்கு செல்லும் விமானம் தொழில்நுட்ப கோளாறால் ரத்து.Air-India-Express-1-3திருச்சியில் தொழில் நுட்பகோளாறால் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ரத்து செய்யப் பட்டது. அதில் செல்ல இருந்த பயணிகள் மாற்று விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டனர்.


திருச்சிலிருந்து துபாய்க்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் இயக்கப்படுகிறது.  இந்த  விமானம் தினமும் நள்ளிரவு 12.20 மணிக்கு திருச்சி வந்து, 12.55க்கு பயணிகளை ஏற்றிச் செல்வது வழக்கம். நேற்று அந்த விமானத்தில் செல்ல 173 பயணிகள் சோதனை முடித்து காத்திருந்தனர். விமானமும்  வழக்கம் போல் நேற்று அதிகாலை வந்தது.


அப்போது விமானத்தை பொறியாளர்கள் அடங்கிய குழுவினர் சோதனை செய்தனர்.  இதில்  தொழில் நுட்ப கோளாறு  இருப்பது கண்டு பிடிக்கப் பட்டது.


இதையடுத்து விமான நிறுவன அதிகாரிகள் விமானம் ரத்து செய்யப் பட்டதாக அறிவித்தனர். பின்னர் அந்த விமானத்தில் செல்ல  இருந்த பயணிகளை  பஸ் மூலம் அழைத்து  வந்து ரேஸ் கோர்ஸ் சாலையில் உள்ள தனியார்  ஓட்டலில்  தங்க  வைத்தனர்.


நேற்று  மதியம்  துபாயிலிருந்து மற்றொறு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்  வர வழைக்கப்பட்டது.  பயணிகளை  ஏற்றிக் கொண்டு அந்த விமானம்  12.30க்கு  புறப்பட்டது.


Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.