எதிர்காலத்தில் மிகப்பெரும் ஆபத்தாக மாறப்போகும் செல்போன் கோபுரங்கள்.27-mobile-tower3454-600செல்போன் தயாரிக்கும் தனியார் நிறுவனங்களும், விற்பனை மையங்களும் புற்றீசல்போல் அதிகரித்து வருகின்றன.


இந்தியாவில் 60 கோடிப் பேர் செல்போன் சேவையைப் பயன்படுத்துவதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.


நாட்டின் மக்கள்தொகையில் 50 சதவீதத்தினர் இச்சேவையைப் பயன்படுத்தி வருகின்றனர்.


செல்போன் பயன்பாடு அதிகரித்து வருவது ஒருபுறம். செல்போன்களினால் ஏற்படும் பாதிப்புகளும் அதிர்ச்சி அளிக்கிறது. செல்போன் கோபுரங்கள், செயற்கைக்கோள் போன்றவற்றின் கதிர் வீச்சுத் தாக்கம் காரணமாக வெளவால், சிட்டுக்குருவி, தட்டான் போன்ற அரிய வகைப் பறவையினங்கள் அழிந்து வருகின்றன என வன உயிரின வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். பறவையினங்கள் அழிந்து வருவதால் சுற்றுச்சூழல் பாதிக்கிறது.


இதைவிட செல்போன் சேவைக்காக அமைக்கப்பட்டுள்ள கோபுரங்கள் பெரும்பாதிப்பைத் தருவதாகக் கூறப்படுகிறது. வாடிக்கையாளர்களுக்குச் சிறந்த சேவையை அளிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் செல்போன் நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு செயல்படுகின்றன.


இதன் விளைவாக, செல்போன் சேவைக்கான கோபுரங்கள் குடியிருப்புப் பகுதியில் அதிக அளவில் அமைக்கப்பட்டு வருகின்றன. ஊருக்குள் திரும்பிய திசையெங்கும் செல்போன் கோபுரங்கள் கண்ணில்படுகின்றன.


இந்தக் கோபுரங்கள் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில், அடுக்குமாடிக் குடியிருப்புகளில் அமைந்திருப்பதால் அதன் கதிர் வீச்சுகளால் மனித உயிர்களுக்கு ஆபத்தைத் தருகிறது என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.


செல்போன் கோபுரம் நிறுவப்பட்டுள்ள குடியிருப்புப் பகுதியில் வசிப்பவர்களுக்கு இதயம் தொடர்புடைய நோய்கள் தாக்குவதாகவும், கர்ப்பிணிப் பெண்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.


செல்போன் கோபுரங்கள் அமைந்துள்ள குடியிருப்புப் பகுதியில் பிறந்த குழந்தைகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர்.


எதிர்காலத்தில் மிகப்பெரும் ஆபத்தாக மாறப்போகும் அதன் உண்மை நிலைமை தெரியாமல், குடியிருப்புப் பகுதிகளில் பணத்துக்கு ஆசைப்பட்டு செல்போன் கோபுரங்களை அமைத்துக்கொள்ள அனுமதி வழங்கிவிடுகின்றனர்.


சாதாரண மின்கம்பிகளில் அமரும் காகம், குருவிகள்கூட இந்த செல்போன் கோபுரங்களில் அமர்வதில்லை. அதன் உள்ளார்ந்த தீமைகளைப் பறவைகள் உணர்ந்த அளவுக்குக்கூட மனிதர்கள் உணரவில்லையோ என்று எண்ண வேண்டியிருக்கிறது.


இனி,  எதிர்காலத்திலேனும் செல்போன் கோபுரங்கள் அமைவதற்கான கறாரான விதிகளை அரசு உருவாக்க வேண்டும்.

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.