‪சிங்கப்பூரில் தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்க்கும் தமிழர்கள்.singaசிங்கப்பூரில் நடந்த ஒரு மகிழ்ச்சியான நிகழ்வு (24/08/2015). தமிழகத்திலிருந்து சிங்கப்பூருக்கு கட்டிட வேலைக்கு வந்திருக்கும் திரு. சரவணன் மற்றும் அவரது இரண்டு நண்பர்கள் ஒரு தொடர்வண்டியில் அமர்ந்து தனது வேலையிடத்துக்குப் பயணம் செய்து கொண்டிருந்தனர்.


அப்போது இன்னொரு நிறுத்தத்தில் வயதான ஒரு ‪சீன தாத்தா (Mr.Lau) அதே வண்டியில் ஏறியிருக்கிறார். அவரைப் பார்த்தவுடன் அவர்கள் மூவருமே அவர்களது இருக்கைகளிலிருந்து எழுந்து அந்த முதியவருக்கு இடமளித்து அமரச் சொல்லியிருக்கின்றனர்.


அவர்களின் அந்த இரக்க மனம் கண்டு நெகிழ்ந்த அந்த முதியவர் அவர்களையும் தனக்குப் பக்கத்தில் காலியாக இருக்கும் இருக்கைகளில் அமரச்சொல்லி அவர்களோடு ஆங்கிலத்தில் உரையாடியிருக்கிறார்.


இங்கு வந்து ஒரு சில நாட்களேயான அவர்களில் சரவணனுக்கு மட்டும் கொஞ்சம் ஆங்கிலம் புரிந்தததால் அவர்களிடம் அந்த சீன முதியவர் மகிழ்ச்சியாக உரையாடியிருக்கிறார்.


அப்போது அந்த தமிழக நண்பர்களிடம் அவர் கூறியது “நீங்கள் இந்த நாட்டின் வளர்ச்சிக்காகவும் எங்களுக்காகவும் எவ்வளவோ சிரமப்பட்டு வேலை செய்கிறீர்கள்., எங்களுக்கு அழகான வீடுகளையும் கட்டித் தருகிறீர்கள்., ஆகையால் பொதுப் போக்குவரத்தில் பயணம் செய்யும்போது உங்களது இருக்கையை இங்குள்ளவர்களுக்கு விட்டுத்தர வேண்டுமென்ற அவசியமில்லை.,


நீங்களும் இங்குள்ளுவர்களைப்போல் தாராளமாக அமரலாம்., அது உங்களின் உரிமை” என்று அவர் கூறவே, மிகவும் நெகிழ்ந்த அந்த நண்பர்கள் அவரோடு கைகுலுக்கி புகைப்படமும் எடுத்துக்கொண்டு விடைபெற்றுள்ளனர்.


அங்கு நடந்த அந்த நிகழ்வுகளை கவனித்துக்கொண்டிருந்த சிங்கப்பூரின் பிரபல பத்திரிக்கையான ‪THE STRAIT TIMES நிருபர் ஒருவர் அதை அப்படியே இன்றைய செய்தியில் பிரசுரிக்க அதைப் படித்த அனைத்து இனத்தவர்களும் அந்த நண்பர்களின் நற்செயலை மனதார பாராட்டி வருகின்றனர்.


நமது தமிழ் நண்பர்களை மனதார பாராட்டிய அந்த சீன முதியவருக்கு இத்தருணத்தில் நாம் நன்றி தெரிவிப்பதோடு மட்டுமில்லாமல், நாம் ஒவ்வொருவரும் அந்த நல்லுள்ளம் கொண்ட நண்பர்களைப் போல் நம்மால் இயன்ற உதவிகளை பிறருக்குச் செய்து நமது தமிழினத்தின் தன்னகரில்லா உதவும் குணத்தை இவ்வுலகுக்குப் பறைசாற்றுவோம்.


வாழ்க தமிழ்.. ‪ வளர்க தமிழரின் பெருமை..


11911393_1645878755655910_9051344486818595527_n copy

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.