முத்துப்பேட்டையில் காவலரை கத்தியால் குத்திய வாசிம் கான் கைது.11855807_681642028635608_1909338665842245333_nமுத்துப்பட்டையில் போலீஸ் காரரை கத்தியால் குத்திய வாலிபர் 3 நாளுக்கு பின் நேற்று கோர்ட்டில் ஆஜர் படுத்தப் பட்டார்.


முத்துப் பேட்டையில் கடந்த 10ம் தேதி பேட்டை பகுதியை சேர்ந்த அப்துல் முத்தலிபு  மகன் வாசிம் கானுக்கும் (20) தெற்கு தெருவை சேர்ந்த சாகுல் ஹமீதுவுக்கும் (25) தகராறு ஏற்பட்டது.


அப்போது  அங்கு சிறப்பு எஸ்ஐ ராமானுஜம் மற்றும் போலீசார் அரவிந்த், சுரேஷ்  ஆகியோர்  வந்தனர். அப்போது வாசிம்கான், பிடிக்க வந்த போலீஸ் காரர்  அரவிந்தை  கத்தியால்  குத்தினார்.


இதையடுத்து  மற்ற  போலீசார் வாசிம் கானை மடக்கி பிடித்து கை, கால்களை கட்டி காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். காயம் அடைந்த போலீஸ் காரர்  அரவிந்த் மருத்துவ மனையில் சேர்க்கப் பட்டார்.


அன்று  இரவு  முழுவதும் பெருக வாழ்ந்தான் காவல் நிலையத்திலும், 11ம் தேதி எடையூர்  காவல் நிலையத்திலும், நேற்று காலை முத்துப் பேட்டை காவல் நிலையத்திலும் வைத்து வாசிம் கானிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவரை போலீசார் அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.


இந் நிலையில் வாசிம் கானை பார்க்க  அவரது நண்பர்கள், உறவினர்கள்  நேற்று  முத்துப் பேட்டை காவல் நிலையம் சென்றனர். ஆனால் அவரை பார்க்க போலீசார் அனுமதிக்கவில்லை. அப்போது போலீசார் பரபரப்புடன் இருந்ததால், காவல் நிலையத்தில் வாசிம்கான் இறந்து விட்டதாக வதந்தி பரவியது.


இதையடுத்து இந்திய தவ்ஹீத் ஜமாத் மாநில செயலாளர் முகம்மது ஷிப்லி எஸ்பி ஜெயசந்திரனை தொடர்பு கொண்டு, நீதிமன்ற விதிமுறையை மீறி வாசிம் கானை நீமன்றத்தில் ஒப்படைக்காமல் காவல் நிலையத்தில் வைத்து துன்புறுத்தி வருகிறார்கள். உடன் நீதி மன்றத்தில் அந்த வாலிபரை ஆஜர் படுத்தா விட்டால் டி.ஜி.பி.ஐயை சந்திப்பேன். தமிழக முழுவதும் போராட்டம் வெடிக்கும் என்றார்.


இதையடுத்து எஸ்பி உத்தரவுப்படி, வாசிம் கானை காவல் நிலையம் எதிரில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்து விட்டு நேற்று மாலை திருத்துறைப்  பூண்டி  நீதிமன்றத்தில்  ஆஜர்  படுத்தினர்.


Share on Google Plus

1 comments:

  1. K.S.A.ஜமாலுதீன்August 13, 2015 at 8:59 PM

    வாசிம் கானுக்கு இதெல்லாம் தேவையா ? வாலிபப் பருவத்தில் தகராறு நடப்பது சகஜம். போலீஸ் கூப்பிட்டால் போகவேண்டியது தானே ? 3 நாள் ராத்திரி பூராவும் தூங்கவிடாமல் பின்னி எடுத்து இருப்பாங்களே, வர்றவன்/போறவனெல்லாம் அடித்திருப்பானே !

    ReplyDelete

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.