மனிதர்களை கொண்டு உருவாக்கப்படும் எழுத்துக்கள் இந்தியில் மட்டும்தானா?..உலகமே   உற்று  11902554_1133369640011218_5410722930052070680_nநோக்கும் இந்திய சுதந்திர நாள் விழாவில் இந்தியில் மட்டுமே செய்திகளை வழங்கியது இந்திய அரசு. மனிதர்களை கொண்டு உருவாக்கப்படும் எழுத்துக்கள் இந்தியில் மட்டுமே இருந்தது.


இதை பார்க்கும் வெளிநாட்டு மக்கள் என்ன நினைப்பார்கள்? இந்தியாவின் தேசிய  மொழி  இந்தி என்றல்லவா தவறாக நினைப்பார்கள். இந்தியாவில் இந்தி  மட்டுமே  பேசப்படுகிறது  என்றும்  நினைப்பார்கள்  அல்லவா ?


ஒரு சிறிய நாடான சிங்கப்பூர் அதன் விடுதலை நாள் விழாவில் தமிழர்களை மதித்து தமிழ் மொழியில் செய்தியை வழங்குகிறது. உலகமே தமிழ் மொழியை காணும் வகை செய்கிறது சிங்கை அரசு.


ஆனால் உலகிலேயே மூத்த மொழியான தமிழ் மொழி இந்திய அரசால் மதிக்கப்படுவதே  இல்லை.  தமிழர்கள் இந்திய விடுதலைக்கு ஆற்றிய பங்களிப்பு அளப்பரியது. அந்த நன்றிக் கடனுக்காவது இந்திய அரசு தமிழுக்கு இடம் கொடுத்திருக்கலாம் அல்லவா?


இந்தக் கொடுமையை இந்திய அரசியல் கட்சிகள் எவையும் கண்டிக்க முன்வரமாட்டார்கள் என்பதும் வெட்கப்பட வேண்டிய விடயம். இந்திக்கு நிகராக அனைத்து மாநில மொழிகளும் சம உரிமைகள் பெற்றால் மட்டுமே இந்திய  விடுதலைக்கு  ஓரளவு  பொருளிருக்கும். ‪


Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.