போதை வாலிபர் சாவியால் தாக்கியதால் சாவி நெற்றியில் பாய்ந்தது.Untitledசேலம் மாவட்டம்  ஏற்காடு அடுத்த முருகன் நகரை சேர்ந்தவர் தியாகராஜன் (31). ஆட்டோ டிரைவரான இவரது மனைவி கவியரசி. இவர்களுக்கு கடந்த 5 வருடத்திற்கு முன் திருணமாகி, 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.


ஆடி அமாவாசையை முன்னிட்டு நேற்று முன்தினம், கெங்கவல்லி பகுதியில் உள்ள குலதெய்வ கோயிலுக்கு, தியாகராஜன் தனது குடும்பத்துடன் சென்றிருந்தார். பின்னர் வீடு திரும்புவதற்காக அன்றிரவு சேலம் புது பஸ் ஸ்டாண்டிற்கு வந்தார்.


ஏற்காடு பஸ்சுக்காக காத்திருந்த போது, குழந்தைகள் இருவரும் தூக்க கலக்கத்தில் இருந்துள்ளனர். இதனால் அங்குள்ள பிளாட்பாரம் ஓரமாக குழந்தைகளை தூங்க வைத்துள்ளார்.


இரவு 10 மணியளவில், ஏற்காடு பஸ் வந்ததால் சீட் பிடிப்பதற்காக குழந்தைகளை மனைவியிடம் விட்டு சென்றுள்ளார். அப்போது குடிபோதையில் அங்கு வந்த சுமார் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர், தூங்கி கொண்டிருந்த குழந்தைகள் மீது ஷூவை வீசி, சில்மிஷத்தில் ஈடுபட முயன்றதாக கூறப்படுகிறது.


இதை கண்டு அதிர்ச்சியடைந்த கவியரசி சத்தம் போட்டதால், அவரிடமும் சில்மிஷம் செய்ய முயன்றார். இதை தியாகராஜன் வந்து தட்டி கேட்டார். இதனால்  இருவருக்கும்  இடையே  கைகலப்பு  ஏற்பட்டது.


இதில் ஆத்திரமடைந்த போதை வாலிபர், தனது கையில் வைத்திருந்த கார் சாவியை  எடுத்து தியாகராஜனின் நெற்றியில் வேகமாக குத்தினார். இதில் அந்த சாவி 2 அங்குலத்திற்கு தியாகராஜனின் நெற்றிக்குள் பாய்ந்தது.


இதனால் வலியால் மயங்கி கீழே விழுந்த அவரை, அருகில் இருந்தவர்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். நெற்றியில் பாய்ந்த சாவியுடன் வாலிபர் அழைத்து வரப்பட்டதால் மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது.


பின்னர், அறுவை சிகிச்சையின் மூலம் நெற்றியில் இருந்து சாவி அகற்றப்பட்டது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த பள்ளப்பட்டி போலீசார் அருண் (32)  என்பவரை  கைது  செய்தனர்.

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.