அரபு நாடுகளில் கடன்வாங்கி விட்டு சிறையில் வாடும் இந்தியர்களின் விடுதலைக்கு உதவிய நல்லவர்.7e3fb3e9-419d-4679-bd82-786b96aeda50_S_secvpf.gifஅரபு  நாடுகளில் கடன் வாங்கி விட்டு சிறையில் வாடும் இந்தியர்களின் விடுதலைக்கு  20 ஆயிரம் டாலர்  உதவி  வழங்கிய  ஃபிரோஸ் மெர்ச்சன்ட்.


அரபு நாடுகளுக்கு சென்று வேலை செய்தால் சீக்கிரம் லட்சாதிபதிகளாகி விடலாம் என்ற நப்பாசையில் ஆயிரமாயிரம் ஆசைக் கனவுகளுடன் நாள்தோறும் பலர் இங்கு படையெடுக்கிறார்கள். குறிப்பாக கட்டிட வேலை, தச்சு வேலை, கடைகளில் வேலை பார்க்க என்று ஏராளமானோர் செல்கிறார்கள்.


இந்த நாடுகளுக்கு ஆட்களை அனுப்புவதற்காக ஏராளமான ஏஜெண்டுகள் இருக்கிறார்கள். அம்மா அல்லது மனைவியின் தாலியை கூட விற்று பணம் கட்டி சவுதி செல்கிறார்கள். அங்கு அரபு ஷேக்குகளிடம் வேலைக்கு சேர்ந்து விடுகிறார்கள். எத்தனையோ கனவுகளுடன் விமானத்தில் பறந்து சவுதியில் கால்பதிக்கும்  நம்மவர்களில் பலர் அங்கு பேரதிர்ச்சியைத்தான் சந்திக்கின்றனர்.


இவர்களில் குறைந்த அளவே படித்தவர்களுக்கு ஒட்டகம், ஆடு மேய்த்தல், தோட்ட வேலை செய்தல், ரோடுகளை பெருக்குவது, நிறுவனங்களை சுத்தம் செய்வது போன்ற பணிகள்தான் வழங்கப்படுகறது. அவர்களை தற்காலிக கூடாரங்கள் அமைத்து தங்க வைக்கிறார்கள்.


வெயிலில் காய்ந்தும், குளிரில் நடுங்கியும் வேறு வழியில்லாமல் அந்த வேலையையும் பார்க்கிறார்கள். மாத சம்பளமும் ரூ. 7 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரைதான். ஊரில் வாங்கிய கடனை திருப்பி செலுத்த வேண்டுமே, குடும்பமே நம்மை நம்பி இருக்கிறதே என்ற வேதனையோடு சுமை தாங்கிகளாக கண்ணுக்கு தெரியாத நாட்டில் உடலை வருத்தி இவர்கள் உழைக்கிறார்கள்.


நம் நாட்டில் இருந்து செல்லும் தொழிலாளர்களில் பலர் நல்ல ஏஜெண்டுகளை தேர்வு செய்வதில்லை. சிறிய ஏஜெண்டுகள் மூலம் சவுதிக்கு சென்றால் போதும் என்ற அவசரத்தில் சென்று விடுகிறார்கள். அங்கு தனி நபர்களிடம் வேலைக்கு சேர்த்து விடுகிறார்கள். வேலையில் சேர்ந்த ஒரு மாதத்தில் ஒர்க்பர்மிட்  வழங்க  வேண்டும். ஆனால் 6 மாதம் வரை அரபு ஷேக்குகள் பர்மிட் கொடுப்பதில்லை. இதனால் போலீஸ் கையில் சிக்குகிறார்கள். அதன் பிறகு ஒளிந்து ஒளிந்து வேலை பார்க்கிறார்கள்.


20 சதவீதம் பேர் இப்படி இருக்கிறார்கள். இன்னொரு 20 சதவீதம் பேர் அரபுக்களின் தொல்லை தாங்காமல், சரியான சம்பளம் கிடைக்காமல் வேறு வேறு  இடங்களுக்கு சென்று வேலை பார்க்கிறார்கள். இவர்களிடம் முறையான  ஒர்க் பர்மிட் இருக்காது. இதனால் ஒர்க் பர்மிட் வாங்கவும், ஊருக்கு அனுப்பவும் உள்நாட்டு ஷேக்களிடமும் தங்களுக்கு தெரிந்த நண்பர்களிடமும்  இவர்கள்  கடன்  வாங்கி  விடுகின்றனர்.


சிறுக,சிறுக கூடிக் கொண்டே போய் பெரிய தொகையாக கடன் வந்து நிற்கும்போது, பணம் தந்த நபர்கள் கடனாளி மீது போலீசில் புகார் அளிக்கின்றனர். இதையடுத்து, அவர்களை கைது செய்யும் போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துகின்றனர்.


அந்நாடுகளின் சட்டப்படி, கடன் தொகையை அடைக்கும்வரை அவர்களை சிறையில் அடைத்து வைக்கும்படி நீதிபதி உத்தரவிடுகிறார். இவ்வகையில், வாங்கிய கடனை அடைக்க முடியாமல் நூற்றுக்கணக்கான இந்தியர்கள் பல நாட்டு  சிறைகளில்  அடைபட்டுக் கிடக்கின்றனர்.


இவர்களில் துபாய் நாட்டில் உள்ள இந்தியர்களின் கடனை அடைத்து, அவர்களை  விடுதலை செய்து தாய்நாட்டுக்கு அனுப்பி வைக்கும் முயற்சியில் அங்குள்ள  இந்திய தூதரகம் முடிவு செய்தது. இதையடுத்து, இங்குள்ள இந்திய வம்சாவளியை சேர்ந்த வசதியான தொழிலதிபர்களிடம் இருந்து நிதி திரட்ட ஆலோசித்து,  வேண்டுகோள்  விடுக்கப்பட்டது.


இதையடுத்து,  துபாயில் பிரபலமான தங்க நகைக்கடை நடத்திவரும் ஃபிரோஸ் மெர்ச்சன்ட் என்பவர், கடன் தொகையை அடைக்க முடியாமல் சிறையில் வாடும் இந்தியர்களை விடுவிப்பதற்காக 20 ஆயிரம் அமெரிக்க டாலர்களை  ஒரே  தொகையாக  அளித்துள்ளார்.


இந்த தொகையை கொண்டு சுமார் 2 ஆயிரம் டாலர்கள் அளவுக்கு கடன் வாங்கிவிட்டு, சிறைக்குள் அடைப்பட்டிருக்கும் சிலரை முதல்கட்டமாக விடுதலை  செய்வதற்கான  ஏற்பாடுகள்  நடைபெற்று  வருகின்றன.

Share on Google Plus

1 comments:

  1. K.S.A.ஜமாலுதீன்August 20, 2015 at 3:52 AM

    நாட்டில் எத்தைனையோ ஏழைக் குமருகள் கல்யாணம் செய்யும் தருணத்தில் ஒரு கருகமணிக்காக ஒரு பவுன் தங்கத்துக்கு (8 கிராம்) கூட வசதியில்லாமல் ஏங்கிக் கொண்டு இருக்கிற காலக்கட்டத்தில்; துபாய் ஜெயிலுள்ள பொருளாதாரக் குற்றவாளிகளை விளம்பரப் படுத்தி PURE GOLD JEWELLERS வெளிக் கொண்டு வருவதன் அவசியம் என்ன???

    ReplyDelete

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.