அதிராம்பட்டினம் அருகே டேங்கர் லாரி கவிழ்ந்து கொட்டிய பாமாயில்: கிராம மக்கள் குடங்களில் பிடித்து சென்றனர்.தூத்துக்குடியில் இருந்து 20 ஆயிரம் லிட்டர் பாமாயில் ஏற்றிக்கொண்டு ஒரு டேங்கர்  லாரி  காரைக்கால் நோக்கி வந்தது.


அந்த டேங்கர் லாரி நேற்று இரவு 1 மணி அளவில் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் வந்த போது சின்ன பாலத்தின் தடுப்பில் மோதி ஒருபக்கமாக கவிழ்ந்தது. இதில் டேங்கர் லாரியின் மூடி திறந்து பாமாயில் கொட்டியது.


இதுபற்றிய தகவல் கிடைத்ததும் ராஜாமடம், நண்டுவெட்டி, ஏரிபுறக்கரை உள்பட பல கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் குடங்களுடன் திரண்டு வந்து பாமாயிலை பிடித்து சென்றனர். இதனால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


இதுபற்றிய தகவல் கிடைத்ததும் அதிராம்பட்டினம் போலீசார் மற்றும் நெடுஞ்சாலை ரோந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கிராம மக்களை அங்கிருந்து அகற்றினர்.


மேலும் இந்த விபத்தில் காயமடைந்த விருதுநகரை சேர்ந்த டேங்கர் லாரி டிரைவர் மாரீஸ்வரன் என்பவரை மீட்டு பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர்.

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.