போலியான பர்தா பெண் கைது. தனியார் மருத்துவமனையில் கடத்தப்பட்ட குழந்தை மீட்பு:20150814a_01110600101திருச்சி தனியார் மருத்துவ மனையில் குழந்தை கடத்திய பெண் சிக்கினார். போலீசார் அவரை கைது செய்து குழந்தையை மீட்டனர். குழந்தை மீண்டும் கிடைத்த மகிழ்ச்சியில் தாய் ஆனந்த கண்ணீர் விட்டார்.


திருச்சி மாவட்டம் சோமரசம் பேட்டை அருகே உள்ள போதாவூரை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மனைவி ராதா(32). இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ராதாவுக்கு திருச்சி புத்தூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவ மனையில் கடந்த 11ம் தேதி மீண்டும் பெண் குழந்தை பிறந்தது.


அந்த மருத்துவ மனையில் அறை எண் 4ல் ராதாவும், குழந்தையும் அனுமதிக்கப் பட்டிருந்தனர். ராதாவுக்கு உதவியாக அவரது தாய் ராணி இருந்தார். நேற்று காலை குழந்தையுடன் ராதா கட்டிலில் படுத்து இருந்தார். ராதாவின் தாய் ராணி, அறைக்கு வெளியே இருந்தார். அப்போது அங்கு வந்த பர்தா அணிந்த ஒரு பெண், ராணியிடம் நைசாக பேச்சுக் கொடுத்தார்.


தனது மகளும் பிரசவத்துக்காக இதே மருத்துவமனையில் சேர்க்கப் பட்டிருப்பதாக அவரிடம் கூறினார். பின்னர் குழந்தையை டாக்டர் தூக்கி வரச் சொன்னதாக கூறி ஏமாற்றி குழந்தையை தூக்கி கொண்டு அங்கிருந்து நைசாக தப்பினார்.


இதனால் ராணி கதறி அழுது கூச்சல் போட்டார். இது பற்றி அரசு மருத்துவமனை போலீசாருக்கு தகவல் தெரிவிக் கப்பட்டது. போலீசார் அங்கு சென்று விசாரித்தனர். மருத்துவமனை கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்த போது, அந்த பெண், குழந்தையுடன் வேக வேகமாக வெளியே செல்வது தெரிய வந்தது.


இதையடுத்து அந்த பெண் யார் என்பது குறித்து போலீசார் விசாரித்து வந்தனர். இந் நிலையில் நேற்று முன் தினம் இரவு கீரனூர் போலீசுக்கு ஒருவர் போன் செய்து மலம் பட்டியில் ஒரு இளம் பெண், பிறந்து சில நாளே ஆன பெண் குழந்தையுடன் வந்து உள்ளார். அந்த குழந்தை அழுது கொண்டே இருக்கிறது. அந்த குழந்தையை எங்கேயோ திருடி வந்தது போல தெரிகிறது என தெரிவித் தார்.


இந்த தகவலை திருச்சி கட்டுப் பாட்டு அறை போலீசுக்கு கீரனூர் போலீசார் தெரிவித்தனர். உறையூர் இன்ஸ்பெக்டர் சீத்தாராமன், எஸ்.ஐக்கள் அழகர், வனிதா ஆகியோர் இரவோடு இரவாக மலைப் பட்டிக்கு சென்று அந்த வீட்டில் குழந்தையுடன் இருந்த பெண்ணை பிடித்து விசாரித்தனர்.


விசாரணையில் அவர் பெயர் செடல் ராணி(29) என்பதும், திருச்சி தனியார் மருத்துவ மனையில் இருந்து அந்த குழந்தையை கடத்தி வந்திருப்பதும் தெரிய வந்தது. குழந்தையை மீட்ட போலீசார், அந்த பெண்ணை கைது செய்து திருச்சி அழைத்து வந்தனர்.


பின்னர் மீட்கப் பட்ட குழந்தையை மருத்துவ மனையில் இருந்த தாயிடம் ஒப்படைத்தனர். குழந்தை மீண்டும் கிடைத்தால் அந்த பெண் ஆனந்த கண்ணீர் வடித்தார். குழந்தையை மீட்டு கொடுத்த போலீசாருக்கு நன்றி தெரிவித்தார்.


கைதான செடல் ராணியி டம் போலீசார் விசாரித்த போது அவர் கூறியதாவது: எனது சொந்த ஊர் கீரனூர் அருகே உள்ள மலைப் பட்டி. எனக்கும் மணப் பாறை தாலுகா முத்துப் பட்டியை சேர்ந்த சவரி முத்து(35) என்பவருக்கும் 5 வருடங்களுக்கு முன் திருமணம் நடந்தது.


எங்களுக்கு குழந்தைகள் இல்லை. இதனால் மன வேதனையில் துடித்தோம். சில மாதங்களுக்கு முன் கருத்தரித்தேன். இதனால் என்னை கணவரும், என் பெற்றோரும் அன்போடும், ஆசையோடும் உபசரித்தார்கள். எந்த வேலையும் செய்ய விடவில்லை.


ஆனால் அந்த மகிழ்ச்சி ரொம்ப நாள் நீடிக்க வில்லை. கடந்த மாதம் திடீரென எனது கர்ப்பம் கலைந்து விட்டது. இதை யாரிடமும் கூற வில்லை. இதை சொன்னால் எனது கணவரின் மனது உடைந்து விடும் என்பதற்காக அவரிடம் கூட சொல்லவில்லை.


நான் கருத்தரித்ததும், திருச்சியில் உள்ள இதே மருத்துவ மனைக்கு தான் சிகிச்சைக்கு வந்தேன். இதனால் இதே மருத்துவ மனையில் குழந்தையை திருடுவது என முடிவு செய்தேன்.  இதற்காக நேற்று முன் தினம் காலையிலேயே மருத்துவ மனைக்கு செல்வதாக கூறி விட்டு இங்கு வந்தேன்.


பர்தா அணிந்து கொண்டு ராதாவின் குழந்தையை கடத்தி விட்டு நேராக மருத்துவ மனைக்கு முன் வந்து மெயின் கார்டு பஸ் ஏறி மலைக் கோட்டை வாசலுக்கு எதிரே உள்ள சர்ச் அருகில் இறங்கினேன். அந்த சர்ச் மண்டபத்தில் சிறிது நேரம் இருந்தேன்.


குழந்தை அழத்துவங்கியது. எனவே குழந்தையுடன் எனது பெற்றோர் வீட்டுக்கு வந்து விட்டேன். குழந்தைக்கு பால் வாங்கி காய்ச்சி கொடுத்தேன். ஆனாலும் குழந்தை அழுவதை நிறுத்த வில்லை. அப்போது தான் அக்கம் பக்கத்தினர் வந்து ஏன் குழந்தை அழுது கொண்டே இருக்கிறது, யார் குழந்தை என கேட்டனர்.


தத்து எடுத்து வந்திருக்கிறேன் என கூறினேன். ஆனால் யாரும் அதை நம்ப வில்லை. நள்ளிரவில் போலீசார் வந்து என்னை பிடித்து விசாரித்த போது நடந்த சம்பவங்களை கூறி விட்டேன். இனி எனக்கு குழந்தை பாக்கியம் இருக்காதோ என்ற எண்ணத்தில் தான் அந்த குழந்தையை திருடி விட்டேன். இவ்வாறு அவர் கூறினார்.


படத்தில் குழந்தையை பறிகொடுத்த தம்பதியினர்.


20150814a_01110600101


மீட்கப் பட்ட குழந்தைக்கு முத்தமிடும் தாய். அடுத்த படம்: குழந்தையை கடத்தியதாக  கைதான செடல் ராணி.


20150815a_01110601402

Share on Google Plus

1 comments:

  1. K.S.A.ஜமாலுதீன்August 15, 2015 at 4:22 PM

    போலியான பர்தா பெண் / உண்மையான பர்தா பெண், இங்கேதான் நாம் தப்பு பண்ணுகிறோம். திருடிகளுக்கு முஸ்லிம் பெண் வேடமணிந்து கிரிமிணலில் ஈடுபட வேண்டுமென்ற எண்ணமில்லை ! யாரும் பார்த்து விடாத வண்ணம் முக்காடுபோட்டுக் கொண்டு காரியம் சாதிப்பதே !!!

    ReplyDelete

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.