மாமூல் தர மறுத்த மாற்றுத்திறனாளி கடைக்காரரை வெட்ட வந்த ரவுடி- தடுத்து காப்பாற்றிய வாடிக்கையாளர்: வீடியோ இணைப்பு.11866468_878412358902304_5029715321284294069_nமாமூல் தர மறுத்த செல்போன்கள் விற்பனை செய்யும் மாற்றுத்திறனாளி கடைக்காரரை வாளால் வெட்ட வந்த ரவுடியைத் தடுத்து அவரை வாடிக்கையாளர் ஒருவர் காப்பாற்றிய சம்பவம் மும்பையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கிழக்கு மும்பையில் உள்ள செம்பூர் பகுதியில் கடந்த மே மாதம் ஆறு பேர் அடங்கிய ரவுடிகள் குழு அப்பகுதி வியாபாரிகள் தொடர்ந்து அவர்களுக்கு ஆயிரம் ரூபாய் மாமூல் வழங்க வேண்டும் என கட்டளை விதித்தது.


அவ்வாறு, தர மறுப்பவர்களது கடைகள் தீ வைத்துக் கொளுத்தப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்திருந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பணம் கட்ட முடியாது என இப்பகுதியில் செல்போன் கடை நடத்திவரும் மாற்றுத்திறனாளியான ரஜ்னிஷ் சிங் தாக்கூர் என்பவர் மறுத்துள்ளார்.


இந்நிலையில், தாக்கூர் மீது உள்ள முன்பகையால் கொலை செய்ய வாளுடன் அவரது கடைக்குள் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு ஒரு ரவுடி நுழைந்தான். அவரது கையிலும், கழுத்திலும் வாளால் அவன் தாக்கினான்.


சரியான நேரத்தில் அங்கிருந்த ஒரு முஸ்லிம் வாடிக்கையாளர் அந்த ரவுடியைத் தடுத்து தாக்கூரின் உயிரைக் காப்பாற்றி, அந்த ரவுடியை சுற்றிவளைத்துப் பிடித்து போலீசில் ஒப்படைத்தார்.


இந்தக் காட்சிகள் அந்த கடையில் வைக்கப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியுள்ளது.


பிடிபட்ட ரவுடி கொடுத்த தகவலின் பேரில் 6 பேர் அடங்கிய அந்தக் குழுவைச் சேர்ந்த மேலும் மூவரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக இருக்கும் இருவரைப் போலீசார் தற்போது தீவிரமாக தேடி வருகின்றனர்.


தாக்குதலுக்கு உள்ளான தாக்கூர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.


சி.சி.டி.வி. கேமராவில் பதிவான அந்த வாடிக்கையாளரின் வீர சாகசம் உங்கள் பார்வைக்கு...


Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.