முத்துப்பேட்டை காவல் நிலையத்தை பெண்கள் முற்றுகை.mtt policeமுதியவருக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை கைது செய்யக் கோரி முத்துப் பேட்டையில் பெண்கள் போலீஸ் ஸடேஷனை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


முத்துப் பேட்டை அடுத்த கோவிலூர் மணல் மேடு கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யா கண்ணு (75). இவர் நேற்று அப்பகுதியில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.


அப்பொழுது அதே பகுதியைச் சேர்ந்த வீரசேகர் என்பவர் முன் விரோதத்தில் அய்யாகண்ணுவை  வழி மறைத்து தகராறு செய்து ஜாதி பெயரை கூறி திட்டி கொலை  மிரட்டல்  விடுத்ததாக  கூறப்படுகிறது.


இது குறித்து அய்யாக் கண்ணு முத்துப் பேட்டை போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர்  ராஜ்குமார், எஸ்ஐ குமரேசன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து  வீரசேகரை  தேடி  வருகின்றனர்.


இந்த  நிலையில்  வீரசேகரை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனக் கோரி அய்யா கண்ணுவின்  உறவினர்கள்  சுமார் 50 க்கும் மேற்பட்ட பெண்கள்  நேற்று  மதியம்  போலீஸ்  ஸ்டேஷனை  முற்றுகையிட்டனர்.


அவர்களிடம் போலீசார் பேச்சு  வார்த்தை நடத்தி விரைவில் வீரசேகரை கைது செய்வதாக உறுதி அளித்தனர். இதையடுத்து பெண்கள் முற்றுகையை கைவிட்டு  கலைந்து  சென்றனர்.


இச் சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.