நரிக்குறவரிடம் ஏமாந்த மலேசிய பூசாரி. நாய்த் தோலுக்கு புலித் தோல் பெயின்ட் அடித்து மோசடி.20150814a_00510600401நரிக்குறவரிடம் ஏமாந்த மலேசிய பூசாரி. நாய்த் தோலுக்கு புலித் தோல் பெயின்ட் அடித்து மோசடி. திருச்சி ஏர்போர்ட் சோதனையில் அம்பலம் ஆனது.


புதுக்கோட்டையை சேர்ந்தவர் குமரன் சுப்பையா (46. இவர் சில வருடங்களுக்கு முன் மலேசியா சென்று அங்கேயே குடியுரிமை பெற்று ஒரு முருகன் கோயிலில்  பூசாரியாக  வேலை  பார்க்கிறார்.


சில நாட்களுக்கு முன் புதுக்கோட்டைக்கு வந்த குமரன் சுப்பையா, உறவினர்களின் இல்ல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். பின்னர் அவர் திருப்பதி  திருவண்ணாமலை அண்ணாமலையார்  கோயில்களுக்கு சென்று சாமி  கும்பிட்டார்.  திருவண்ணா மலையில்  ஒரு நரிக்குறவரை சந்தித்தார்.


அவரிடம் புலித்தோல், புலி நகம் உள்ளது. அவை வைத்திருந்தால் ராசியானது என்றும், நகத்தை  தங்கத்தில் டாலர் செய்து அணிந்தால் அதிர்ஷ்டம் பொங்கும் என்று கூறி உள்ளார். இதை நம்பிய குமரன் சுப்பையா, ரூ 700க்கு புலித்தோடுடன் கூடிய 4 புலி நகத்தை வாங்கி வந்தார். நேற்று காலை மலேயாவுக்கு  புறப்பட்ட  அவர்,  அவற்றையும்  எடுத்து  சென்றார்.


திருச்சி விமான நிலையத்தில் வான் நுண்ணறிவு சுங்க அதிகாரிகள், புலித்தோலுடன் புலி நகம் கடத்தப்படுவதை அறிந்து குமரன் சுப்பையாவை பிடித்தனர்.


பின்னர் அவரை மாவட்ட வன அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தனர். மாவட்ட  வன  அலுவலர்  சதீஷ் உத்தரவின் பேரில் வனசரகர் அலுவலர் சரவண  குமார் மற்றும் அதிகாரிகள் விமான நிலையம் சென்றனர். அவர்களிடம் சுங்க  அதிகாரிகள் குமரன் சுப்பையாவையும் புலித்தோலையும் ஒப்படைத்தனர்.


அதிகாரிகள் அவரை அழைத்துச் சென்று விசாரித்த போது திருவண்ணா மலையில்  வாங்கியதாக தெரிவித்தார். ஆனால் பறிமுதல் செய்யப் பட்ட புலித் தோல், புலிப்பல் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.


பின்னர் அவற்றை ஆய்வு செய்த அதிகாரிகள் அது புலி நகம், புலித் தோல் அல்ல. நாய்த் தோல் மீது பெயின்ட் அடித்து புலித் தோல் போல மாற்றியிருப் பது தெரிய வந்தது.


புலி நகத்துக்கு பதில் 4 பிளாஸ்டிக் நகங்களை ஒட்ட வைத்து கொடுத்ததும் தெரிய வந்தது. எனவே குமரன் சுப்பையாவை அதிகாகள் விட்டு விட்டனர். அதி கிகள் நடத்திய சோதயில் தான் குமரன் சுப்பையா ஏமாந்த கதை வெளியே தய வந்தது.


Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.