திருமயம் அருகே கார் மீது லாரி மோதல். பேராசிரியர் ஜவாஹிருல்லா தப்பினார்.3b6aa9f4-a2b0-4a4c-95e7-3571833a90a6_S_secvpf.gifதிருமயம் அருகே கார் மீது லாரி மோதியது. இதில் காரில் இருந்த எம் எல் ஏ ஜவாஹிருல்லா  காயமின்றி  தப்பினார்.


மனித நேய மக்கள் கட்சியின் மூத்த தலைவர் ஜவாஹிருல்லா புதுக்கோட்டை மாவட்டம்,  கீரனூரில்  உள்ள  தனது உறவினரை பார்ப்பதற்காக  நண்பர்  ஒருவருடன், நேற்று ராமநாதபுரத்தில்  இருந்து காரில் புறப்பட்டு வந்து கொண்டிருந்தார்.


புதுக்கோட்டை  மாவட்டம்  திருமயம் அருகே பைபாஸ் சாலையில் மதியம் 2 மணியளவில்,  திருமயத்தில் இருந்து லெம்பலக்குடிக்கு சென்ற டிப்பர் லாரி இவர்களது கார் மீது மோதியது. இதில் காரின் ஒரு பகுதி லேசான சேதமடைந்தது.


இருப்பினும்  இந்த  விபத்தில் காரில் பயணம் செய்த எம் எல் ஏ, அவரது நண்பர்,  காரை ஓட்டிய டிரைவர்  ஆகியோர்  காயமின்றி  தப்பினர். இது குறித்து திருமயம் போலீசார் வழக்குப் பதிந்து, விபத்து ஏற்படுத்திய டிப்பர் லாரியை  ஓட்டி வந்த திருமயம் அடுத்த மேல் நிலை வயல் கிராமத்தை சேர்ந்த  பழனியப்பனை  (42)  கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


பின்னர் எம் எல்ஏ ஜவாஹிருல்லா அதே காரில் கீரனூருக்கு புறப்பட்டு சென்றார்.

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.