முத்துப் பேட்டை அருகே இளம்பெண்ணுக்கு கட்டாய திருமணம். போலீசில் தாய் புகார்.6393253407_c7787859bf_zமுத்துப் பேட்டை அருகே இளம் பெண்ணை ஏமாற்றி அழைத்துச் சென்று கட்டாய திருமணம் செய்து விட்டதாக பெண்ணின் தாய் போலீசில் புகார் அளித்தார்.


முத்துப் பேட்டை  எடையூர்  வடசங்கேந்தி பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ்(50) விவசாயி. இவரது மனைவி ராணி(47). இவர்கள் மகள் சௌந்தர்யா(21).


நேற்று முன்தினம் நாகராஜின் வீட்டிற்கு குமாரபுரம் கிராமத்தைச் சேர்ந்த அவரின் உறவினர் சம்பத் வந்தார். குடும்பத்தினர் இருக்கும் போதே சௌந்தர்யாவிடம்  தனது  தாய்க்கு புடவை எடுக்க வேண்டும் என கூறி அழைத்துச்  சென்றார்.


ஆனால் இரவாகியும் செளந்தர்யா வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த  தாய் ராணி நேற்று எடையூர் போலீசில் புகார் அளித்தார். அதில் சம்பத் தனது மகளை ஏமாற்றி அழைத்துச் சென்று அவரது உறவினர் ரகுநாதன் (31) என்பவருக்கு கட்டாய திருமணம் செய்து வைத்து விட்டதாக கூறியிருந்தார்.


இதையடுத்து இன்ஸ்பெக்டர்  (பொ) ராஜ்குமார்  வழக்கு  பதிவு செய்து விசாரணை  நடத்தி   வருகிறார்.

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.