'மெஹர்' திரைப்படத்தைப் பார்த்து மெய்சிலிர்த்துப் போனேன்.11846705_1880379925519955_8529628127030739206_nவிஜய் டிவி சித்திரம் பகுதிக்காக, அன்பு நண்பர் தாமிரா இயக்கத்தில் அருமைச் சகோதரி சல்மாவின் நடிப்பில் வந்திருக்கும் 'மெஹர்' படத்தைப் பார்த்து மெய்சிலிர்த்துப் போனேன்.


இஸ்லாமிய கருத்தியலையும் முஸ்லிம்களின் வாழ்வியலையும் சொல்லும் அற்புதமான திரைப்படம் மெஹர். அதைப் பற்றி விவரித்து எழுதவோ வர்ணிக்கவோ வார்த்தைகளின்றி தவிக்கிறேன்.


ஒருபக்கம்  சினிமா கூடாது என்று விலகி நிற்கும் முஸ்லிம் சமூகம். மறுபக்கம் சினிமா முழுவதும் விரவிக் கிடக்கும், முஸ்லிம்கள் குறித்த தவறான சித்திரம். இந்த இரண்டு நிலைகளுக்கும் மாறாக அல்லது மாற்றாக வந்திருக்கும் படம்தான் மெஹர்.


சினிமா  என்பது  ஒரு  வலிமையான  ஊடகம்  என்பதை  தொடர்ந்து  வலியுறுத்தி வருகிறேன். பல்லாண்டுகளாக நான் எழுதி பேசி இயங்கி முஸ்லிம்களிடம் புரிய வைக்க முடியாததை - ஒரே படத்தில் புரிய வைத்துள்ளார் தாமிரா.


என் பணியை எளிதாக்கிய நண்பருக்கு நன்றிகள். படத்தில் வாழ்ந்து காட்டியுள்ள சல்மா உள்ளிட்ட அத்தனைக் கலைஞர்களுக்கும் வாழ்த்துகள்.


முஸ்லிம்களிடம் ஊடக விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்குக் கிடைத்துள்ள பேராயுதம்  தான்  மெஹர்.  அதை நம் கைகளில் ஏந்திக் களமாடுவோம்.


...ஆளூர் ஷா நவாஸ்


11846705_1880379925519955_8529628127030739206_n

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.