விமானி மரணம்: நடுவானில் பறந்த விமானத்தை தரை இறக்கிய பெண்.mfmqT4Iநடுவானில் விமானி மரணம் அடைந்ததை தொடர்ந்து நடுவானில் பறந்த விமானத்தை ஒரு பெண் தரை இறக்கினார்.


ஸ்பெயின் நாட்டில் செவிலே பகுதியில் ஒரு பெண் தனது கணவருடன் குட்டி விமானத்தில் பயணம் செய்தார். அந்த விமானத்தை அவரது கணவரே ஓட்டினார்.


விமானம் நடுவானில் 10 ஆயிரம் அடி உயரத்தில் பறந்தபோது அவரது கணவருக்கு  திடீரென  மாரடைப்பு  ஏற்பட்டு  மயக்கம்  அடைந்தார்.


இதனால் விமானம் தள்ளாடி நிலைதடுமாறியது. அதைப் பார்த்த அப்பெண்ணுக்கு  என்ன  செய்வதென்று தெரியவில்லை. அதை தொடர்ந்து அவர் விமான தரை கட்டுப்பாட்டு அறையில் இருந்த போக்குவரத்து கண்ட்ரோலரை  தொடர்பு கொண்டார்.


அவரிடம்  தனது  நிலையை  விளக்கினார். உடனே அவர் விமானத்தை நீங்களே இறக்குங்கள் என்றார். ஆனால் அப்பெண்ணுக்கு விமானம் ஓட்ட தெரியாது.  இதற்கு  முன்பு  அதை  இயக்கிய  அனுபவம்  இல்லை.


இருந்தாலும் தரை கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்ட்ரோலர் சொல்லிக் கொடுத்தபடியே விமானத்தை ஓட்டினார். சுமார் 90 நிமிட பயணத்துக்கு பின் ஒரு வழியாக செவிலே விமான நிலையத்தில் விமானத்தை தரை இறக்க முயன்றுள்ளார்.


ஆனால்,  கட்டுப்பாட்டை  இழந்த விமானம், ஓடுபாதையில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில்  உள்ள  ஆரஞ்சு  தோப்பிற்குள்  தரையிறங்கியது.


தரையில் மோதியபடி தரையிறங்கியதால் விமானம் கடுமையாக சேதம் அடைந்தது. அதில் அப்பெண் படுகாயம் அடைந்தார். இதற்கிடையே விமானத்தில் மயங்கி கிடந்த அப்பெண்ணின் கணவர் அதாவது விமானி மரணம் அடைந்தார்.


இச்சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.