தலையில் மிகப்பெரிய கொம்பு வளர்வதால் அவதிப்படும் சீன மூதாட்டி. வீடியோஇணைப்புKatti.avi_snapshot_00.15_[2015.08.29_21.34.18]தென்மேற்கு சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் வசித்து வரும் லியாங் க்சியுஷென்(87) என்பவருக்கு தலையில் திடீரென கொம்பு முளைத்துள்ள காரணம் புரியாமல் டாக்டர்கள் தவித்து வருகின்றனர்.


கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பு இவரது தலையில் சிறிய கருப்பு கட்டி ஒன்று உருவானது. அப்போதைக்கு இந்தக் கட்டியை நாட்டு வைத்தியரிடம் காண்பித்து சரிசெய்து கொண்டுள்ளார், இந்த மூதாட்டி. இந்தக் கட்டி இரண்டாண்டுகளுக்கு முன் திடீரென உடைந்தது. இது தலையின் மீது சிறு விரல் அளவிளான கொம்பாக வளர்ந்தது.


இதையடுத்து, பயந்துபோன லியாங்கின் மகன் அவரை அருகாமையில் இருக்கும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். எனினும், அவரைச் சந்தித்த மருத்துவர்களுக்கு இந்த அதீத வளர்ச்சியின் காரணம் புலப்படவில்லை. இதை என்ன? ஏது? என அறிந்துகொள்ள மகன் ஆர்வமாய் இருந்தாலும், மூதாட்டி மீண்டும் மருத்துவர்களை சந்திக்க பிடிக்காததால் செல்லமறுத்தார்.


சுமார் ஆறு மாதங்களுக்கு முன்பு தலைமுடியை அலசும்போது எதிர்பாராத விதமாக கொம்பில் இடித்துக் கொண்டதில், அது அசுர வேகத்தில் மீண்டும் வளரத் தொடங்கியது. வெறும் ஆறு மாதங்களில் அது சுமார் 5 அங்குல உயரத்துக்கும், 2 அங்குல அகலத்துக்கும் வளர்ந்துள்ளது. ஆங்காங்கே இது வெடித்து, அதில் ரத்தம், வெளிவரத் தொடங்கியுள்ளது.


தற்போது தலையில் இந்தக் கொம்பு ஏற்படுத்தும் வலியால் நிம்மதியான தூக்கத்தையும் இழந்துள்ளார் லியாங். சமீபத்தில் அவரைச் சந்தித்த மருத்துவர்கள் சரும புற்றுநோயல்தான் இப்படி வளருவதாக கூறியுள்ளனர். இதனால், சோகமடைந்த அவரது மகன் இதுபற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளார்.


இந்தக் கொம்பு நமது உடலின் நகம், முடி வளர்வதற்கான முக்கிய புரோட்டினாக விளங்கும் கேரட்டீனால் ஆனது. நம் உடலின் மீது அதிகமாக சூரிய ஒளி படும் பாகங்களில் இவ்வாறு பாதிப்பு ஏற்படலாம். இங்கிலாந்து நாட்டில் பெரும்பாலானோருக்கு இவ்வகை புற்றுநோய் உள்ளது குறிப்பிடத்தக்கது.


Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.