பாஸ்போர்ட் பற்றிய முக்கிய தகவல்..



mainPASS என்றால் கடந்து செல்லுதல் PORT என்றால் SEA போர்ட் / AIR போர்ட் ஆகிய துறைமுகங்களைக் கடந்து வெளிநாடு செல்ல வழங்கப்படும் பத்திரத்திற்கு  PASSPORT  என்ற பெயர் வந்திருக்குமோ?


வெளிநாடுகளுக்குச் செல்லும் ஒருவரின் அடையாளத்தையும் நாட்டையும் சான்று  அளித்து ஒரு நாட்டு அரசு வழங்கும் ஆவணம் கடவுச்சீட்டு (PASSPORT) எனப்படும்.


கடவுச்சீட்டில் (PASSPORT) அதை வைத்திருப்பவர் பெயர், பால், பிறந்த தேதி, பிறந்த ஊர்,  தாய்-தந்தை பெயர், கணவன் அல்லது மனைவி பெயர், கடவுச்சீட்டு எண்,  வழங்கப்பட்ட நாள், வழங்கிய அலுவலகத்தின் இடம் ஆகிய தகவல்களைக் கொண்டிருக்கும்.


பெரும்பாலும்  ஒருவரின் நாடும் குடியுரிமை பெற்ற நாடும் ஒன்றாக இருக்கும். கடவுச்சீட்டு இல்லாது வெளிநாடுகளுக்கு பயணிக்க விசா பெறமுடியாது.


சாதாரண கடவுச்சீட்டு [ORDINARY PASSPORT] எனவும், அதிகார பூர்வ பாஸ்போர்ட் [OFFICIAL PASSPORT] எனவும், இராஜ தந்திர கடவுச்சீட்டுக்கு [DIPLOMATIC PASSPORT] என்றும் பல வகைகள்  உள்ளன. சாதாரண குடிமக்களாகிய  நமக்கு  சாதாரண பாஸ்போர்ட்.


புனித பயணம்  (ஹஜ் உட்பட) மேற்கொள்வோருக்கு தனிபாஸ்போர்ட் (ஸ்பெஷல் பாஸ்போர்ட் OR பாஸ்)  வழங்கப்படுகிறது. வெளிநாட்டில் இருக்கும் பொழுது யாருக்காவது பாஸ்போர்ட் தொலைந்தோ அல்லது பழுதாகியோ அல்லது வேறு காரணங்களால் பாஸ்போர்ட் ஐ பயன்படுத்த முடியாமல் போகும் பட்சத்தில் EMERGENCY CERTIFICATE ல் [அவசரசான்றிதல்] சம்பந்தப்பட்ட  தூதரகங்கள் மூலம் வழங்கப்பட்டு சொந்த நாடுகளுக்கு அனுப்பி  வைக்கப்படுவார்கள்.


உதாரணத்திற்கு : 10/20 வருட ஆயுள் உள்ள ஒரு பாஸ்போர்ட்-ஐ இடையில் வேறு காரணத்திற்கு  டூப்ளிகேட் {RE-ISSUE} பெற்று வைத்திருக்கும் பட்சத்தில் வெளி நாடு செல்லும்போது  பழைய பாஸ்போர்ட்-ஐயும் கொண்டு செல்லவேண்டும். புதிய பாஸ்போர்ட் பெற்று இருந்தாலும், பழைய பாஸ்போர்ட்-ல்  விசா  இருக்கலாம் !!


ஏனெனில் புதிய பாஸ்போர்ட்-ல் - பழைய பாஸ்போர்ட்-ஐ ATTACH செய்திருப்பதாக காட்டப்பட்டிருக்கும். கொண்டு செல்லாவிட்டால் நமது நாட்டில் மட்டுமல்ல வெளிநாட்டிலும் சிரமத்திற்கு ஆளாக நேரிடலாம், சகோதரர்களே..


சரி...இப்பொது முக்கிய விசயத்திற்கு வருகிறேன்... சமீபகாலமாக வாட்ஸ் அப் மூலம்  ஒரு அபாயகரமான  செய்தி உலாவிக் கொண்டிருக்கிறது. ஒருவேளை அது  உண்மையாக  இருந்துவிட்டால் (அல்லாஹ் பாதுகாக்கனும்) எதற்கும் முன்னெச்செரிக்கையாக இருந்துவிட்டால் நல்லதுதானே! அதற்காகத்தான் இந்த பதிவு.


வெளிநாடுகள் போய்/வந்துகொண்டிருக்கும் போது, ஏர்லைன்ஸ் ஊழியர்கள் / கஸ்டம்ஸ் / செக்யூரிட்டி / மற்றும் இமிக்ரேசன் அதிகாரிகளால் நமது  பாஸ்போர்ட்  சோதனை  செய்யப்படும்  கட்டாயத்தில்  இருக்கிறது.


நாம் கவனக் குறைவாக இருக்கும்போது நமது விசா மற்றும் முக்கிய பக்கங்களை  நமக்குத் தெரியாமல்  கிழித்தெறிய வாய்ப்புக்கள் இருக்கின்றன.


அவ்வாறு ஒரு சம்பவம் நம்மையும் மீறி நடந்து விட்டால், பிற நாட்டு இமிக்ரேசன் மற்றும் தூதரகங்களிலும் அல்லது நமது நாட்டு இமிக்ரேசன் மற்றும் பாஸ்போர்ட் அலுவலகங்களிலும் நாம் மிகப் பெரிய அல்லலுக்கு ஆளாக வேண்டிவரும். சட்ட சிக்கல்களில் மாட்டுவதொடு, கிரிமினல் நடவடிக்கைகளிலும்  நம்மை ஈடுபடுத்தப்படலாம்!!


இது போன்ற  சம்பவங்கள்  தமிழகத்தில்  நடக்காவிட்டாலும், பம்பாயிலும், ஹைதராபாத்திலும் நடந்து சில பேர் தங்களின் வாழ்க்கையை நாசமாக்கிக்  கொண்டதாக  செய்திகள் வந்துகொண்டு உள்ளது.


ஆகவே எனவே எனது முகந்தெரியாத சொந்த-பந்தங்களே.. வெள்ளம் வரும் முன் அணை கட்டுவது அல்லது வருமுன் காப்பது என்பதை கவனத்தில் கொண்டு  மிகவும் இரட்டை எச்சரிக்கையாக இருந்து திரை கடல் ஓடி திரவியம்  தேட  உங்களை   அன்புடன்  கேட்டுக்  கொள்கிறேன்.


K.S.A. ஜமாலுதீன்...

Share on Google Plus

3 comments:

  1. முகமது இத்ரீஸ்August 15, 2015 at 5:07 AM

    அஸ்ஸலாமு அலைக்கும். என் நண்பரின் பாஸ்போர்ட் 2016/5 காலாவதியாகி விடும். ஆனால் அவர் இப்போது டிரைவர் வேலைக்கு வெளிநாடு செல்ல முடியுமா?

    ReplyDelete
  2. செல்லலாம். அங்கு சென்ற உடன் பாஸ்போர்ட்டை ரினீவல் செய்து கொள்ளவும்.

    ReplyDelete
  3. Asalamualikum .valaikum salam

    My friend in india she already lost his pasport .Already inform newspaper about this issue.When i make police report they not accept my report but i have 4 evidence is pasport,coupon copy,birth cetificate and aadhaar ID but they not give response for my complain.anyone now to solve about this issue please assist for me tq.

    my email ID;abdulhameed36j@gmail.com

    ReplyDelete

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.