முத்துப்பேட்டை அருகே டிரைவர் எரித்துக்கொலை.15-1436952889-self-immolation-600முத்துப்பேட்டை அருகே செந்தில் டிராக்டர்  டிரைவரை எரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். மகளை கொடுமைப்படுத்தியதால் மாமியார் வெறிச்செயலில் ஈடுபட்டுள்ளார்.


முத்துப்பேட்டை அருகே ஜாம்புவானோடையை சேர்ந்தவர்  செந்தில். வயது 35.  டிராக்டர் டிரைவராக வேலை செய்து வந்தார்.


இவர் தினமும்  குடித்து விட்டு வந்து தனது மனைவியை அடித்து துன்புறுத்தி வந்ததாக  கூறப்படுகிறது. இதை அவரது மாமியார் முல்லையம்மாள் கண்டித்து  வந்துள்ளார். நேற்றும் குடித்து விட்டு வந்து மனைவியிடம் தகராறு  செய்துள்ளார்.  பின்னர்  வீட்டில்  படுத்து  தூங்கியுள்ளார்.


தனது மகளை கொடுமைப்படுத்துவதை கண்டு மனமுடைந்திருந்த முல்லையம்மாள்  நேற்றிரவு தூங்கிக் கொண்டிருந்த தனது மருமகன் செந்தில்  மீது   மண்ணெண்ணை   ஊற்றி  தீ  வைத்துள்ளார்.


இதில் படுகாயமடைந்து அலறிய அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு முத்துப்பேட்டை  அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் இறந்தார்.


இதுகுறித்து தகவலறிந்த முத்துப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை  மேற்கொண்டுள்ளனர்.

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.