விரைவில் Google play store-ல் காயிதே மில்லத் வாழ்க்கை வரலாறு..காயிதே+மில்லத்இரண்டு  நாட்களுக்கு முன்னாள் Google play store -ல் ஒரு app இன்ஸ்டால் செய்ய  search  செய்து  கொண்டிருந்தேன்.


related apps வந்தபோது தந்தை பெரியார் பற்றிய குறிப்பு ஒரு apps வந்தது இன்ஸ்டால்  செய்தேன்.


பின்னர் கர்மவீரர் காமராஜர் பற்றிய வாழ்க்கை குறிப்பு  apps வந்தது இன்ஸ்டால் செய்தேன்.


தந்தை பெரியார், காமராஜர் போன்ற மிகப்பெரும் ஆளுமைகள் வாழ்க்கை வரலாற்றை சொல்லும் apps இருக்கிறது என்று எண்ணி உடனே Search Box-ல் காயிதே மில்லத் என்று type செய்து Search செய்தேன்.


இந்த பெயரில் எந்த ஒரு Apps -ம் இல்லை என்று வந்தது. உடனே அண்ணா, கலைஞர் பெயரில் Search செய்தேன் பல Apps வந்து குவிந்தது. பெரியார், காமராஜர், அண்ணா போன்ற பெரும் தலைவர்கள் வாழ்க்கை வரலாறு Apps இருக்கிறது.


காயிதே மில்லத் அவர்கள் பற்றிய ஒரு Apps இல்லை என்று வருத்தப்பட்டு உடனே  Apps Create  செய்யும்  நண்பர்களை தொடர்பு கொண்டு ஒரு Apps create   செய்வதற்கு  செலவுகள்  என்ன  ஆகும்  என்று  கேட்டேன்.


அவர் ஒரு விலை சொன்னார். உடனே காயிதே மில்லத் பெயரில் ஒரு android Apps தயாரிக்க வேண்டும்.பணம் நான் தருகிறேன் என்று சொல்லிவிட்டேன்.


காயிதே மில்லத் பெயரில்  android Apps  தயாராகிக் கொண்டிருக்கிறது. விரைவில் Google play store-ல் காயிதே மில்லத் வாழ்க்கை வரலாறு புத்தக வடிவில் இறைவன் நாடினால்.


இன்னும் கவி.கா.மு.ஷெரீப்,கவிக்கோ அப்துல் ரகுமான்,மணவை முஸ்தபா, பேரா: ஜவாஹிருல்லாஹ் போன்றோர்களின் வாழ்க்கை வரலாற்று Apps செய்வதற்கு  நினைத்துள்ளேன்.


இன்று  Android mobile  இல்லாதவர்களே இல்லை என்ற நிலையில் வாழ்கிறோம். நம்முடைய வரலாற்றை மக்களுக்கு Apps போன்ற நவீன மீடியாவால் புத்தக வடியில்  கொண்டு  செல்ல  எல்லோரும்  முன்வரவேண்டும்.


-Editor Alaudeen.


11781810_1017030048337397_6355828154715004232_n


இவரின் இந்த முயற்சி வெற்றி பெற நாமும் வல்ல அல்லாஹ்விடம் துவா செய்வோமாக...

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.